பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2

பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 20, 2024 09:46 AM IST

தமிழ்நாட்டில் முதல் ஷோ திரையிடுவதற்கு முன்னரே விஜய் சேதுபதியின் விடுதலை 2 படம் ஆன்லைனில் லீக் ஆகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் நாள் முன் வரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2
பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு.. முதல் ஷோவுக்கு முன்னரே ஆன்லைனில் லீக்கான விடுதலை 2

இதையடுத்து படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ஆன்லைனில் லீக்காகி இருப்பது ரசிகர்களையும், கோலிவுட்டினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆன்லைனில் லீக்

விஜய்சேதுபதியின் விடுதலை 2 படத்துக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் காட்சியானது காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது.

இதற்கிடையே விடுதலை 2 படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் ஷோ திரையிடுவதற்கு முன்பே படம் ஆன்லைனில் வெளியாகியிருப்பது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் விடுதலை 2 படத்தின் டவுன்லோடு தொடர்பாக பல்வேறு ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. டெலிகிராம் செயலி, தமிழ் ராக்கர்ஸ், மூவிரூல்ஸ் போன்ற இணையத்தளங்களில் படத்தின் பல்வேறு பிரிண்ட் வெர்ஷன்களின் டவுண்லோடு லிங்குகள் இடம்பிடித்துள்ளன.

படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள் வரை கூட எடிட்டிங்கில் ஈடுபட்டார் இயக்குநர் வெற்றிமாறன். ரலீஸுக்கு முன்பு திடீரென கூடுதலாக 8 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்தார். இதுதொடர்பாக வெற்றி மாறன் பேசிய விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த சூழ்நிலையில் படம் ஆன்லைனில் லீக் ஆகியிருக்கிறது. ரிலீஸ் நாள் முன் வரை பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சு என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

விடுதலை 2 திரைப்படம்

விடுதலை முதல் பாகத்தில் சூரி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரங்கன் வாத்தியார் என்ற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த பாகத்தில் விஜய் சேதுபதியின் ரங்கன் வாத்தியார் பின்னணி கதையை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் கிஷோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த சூரி, பவானிஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் உள்பட பலரும் இந்த பாகத்திலும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

பைரசி லிங்குகளை பார்த்தால் வரும் சிக்கல், ஆபத்துகள்

மால்வேர் த்ரெட்: பைரசி இணையதளங்கள் தீம்பொருள், ஸ்பைவேர் மற்றும் ரான்சம்வேர் ஆகியவற்றுக்கான ஹாட்ஸ்பாட்களாகும். இந்த தீங்கு விளைவிக்கும் நிரல்கள் உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடலாம். அல்லது உங்களது கோப்புகளை சிதைக்கலாம். மீட்கும் தொகை செலுத்தப்படும் வரை உங்கள் சாதனம் லாக் செய்யப்படலாம் கடவுச்சொற்கள் மற்றும் நிதித் தகவல் போன்ற உங்களின் முக்கியமான விவரங்களும் அடையாள திருட்டுக்கு ஆளாகலாம்.

சட்ட சிக்கல்கள்: திருட்டு உள்ளடக்கத்தை அணுகுவது பதிப்புரிமைச் சட்டங்களை மீறும் குற்றமாகும். இது உங்களை கடுமையான சட்டச் சிக்கல்களில் தள்ளும். கடுமையான அபராதம், சாத்தியமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் அல்லது சிறைத்தண்டனை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சந்திக்க நேரிடலாம்.

எதிர்பாராத நிதி இழப்புகள்: திருட்டு தளங்கள் பெரும்பாலும் ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இது நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும். பயனர்கள் மறைக்கப்பட்ட சந்தாக் கட்டணங்கள், கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடுவதற்கான ஃபிஷிங் முயற்சிகள் அல்லது தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட போலி சலுகைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதன் விளைவாக அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏற்படலாம்.

சமரசம் செய்யப்படாத உள்ளடக்கதரம்: பைரிசியில் வெளியாகும் திரைப்படங்கள் பெரும்பாலும் மோசமான பார்வை அனுபவங்களை வழங்குகின்றன. குறைந்த தெளிவுத்திறன் கொண்ட விடியோக்கள், மோசமான ஆடியோ தரம், முழுமையடையாத அல்லது சிதைந்த கோப்புகளை எதிர்பார்க்கலாம். முறையான இயங்குதளங்களைப் போல் அன்றி, இந்த பதிப்புகள் உயர்தர தயாரிப்புகள் போன்ற அதிவேக அனுபவத்தை வழங்கத் தவறும்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.