Viduthalai 2 OTT: வெற்றி மாறன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான வெற்றிப்படம்! ஒடிடியில் வெளியான விடுதலை 2!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viduthalai 2 Ott: வெற்றி மாறன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான வெற்றிப்படம்! ஒடிடியில் வெளியான விடுதலை 2!

Viduthalai 2 OTT: வெற்றி மாறன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான வெற்றிப்படம்! ஒடிடியில் வெளியான விடுதலை 2!

Suguna Devi P HT Tamil
Jan 17, 2025 02:01 PM IST

Viduthalai 2 OTT: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலர் நடித்து வெளியான விடுதலை 2 இன்று ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Viduthalai 2 OTT: வெற்றி மாறன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான வெற்றிப்படம்! ஒடிடியில் வெளியான விடுதலை 2!
Viduthalai 2 OTT: வெற்றி மாறன் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான வெற்றிப்படம்! ஒடிடியில் வெளியான விடுதலை 2!

விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் 

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக விஜய் சேதுபதி முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் வித்தியாசமான கதைகளத்துடனும், இவரது தனித்துவமான நடிப்பிலும் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இவர் வில்லன், சிறப்பு தோற்றம், வயதானவர்  என பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இருப்பினும் தற்போது இனிவரும் படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். விஜய் சேதுபதி தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை அளித்த இயக்குனர் வெற்றிமாறனுடன் விஜய் சேதுபதி இணையும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிதாக காட்சிகள் எதுவும் இல்லை. முதல் பாகத்தில் நடிகர் சூரிய கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதியை மையமாக வைத்தே கதை நகர்கிறது.  இவர்கள் இருவரது கூட்டணியும் படத்திற்கு பெரும்பலத்தை அளித்துள்ளது என்றே கூறலாம். ரசிகர்களின் மனதில்  இப்படத்தின் வாயிலாக எளிமையான சுதந்திர கருத்துகளையும் விடுதலை உணர்வுகளையும் ஊட்டியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். 

ஜி5 ஒடிடி தளம்

விடுதலை படத்தின் முதலாம் பாகம் ஜி5 ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும் விடுதலை படத்தின் கட் செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் இணைத்து எக்ஸ்டெண்டெட் வெர்ஷன் ஆக இப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் உரிமையை ஜி5 ஒடிடி தளமே பெற்றுள்ளது. இப்படம் இன்று (17/01/2025)வெளியான நிலையில் ஜி5 ஒடிடி தளத்தில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்களில் மக்களுக்கு கம்யூனிஸ்ட் பாடம் எடுத்த விடுதலை தற்போது ஜி5 ஒடிடி தளத்தில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது. மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. வருடத்தில் வெற்றிமாறனின் சிறப்பான படங்கள் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படம் குறித்தான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.