விட்டு பிடிக்குமா விடுதலை 2! வீக் எண்டில் தான் தெரியுமா? 7 ஆவது நாள் வசூல் விவரம் என்ன தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்து வெளியான விடுதலை இரண்டாம் பாகம் படத்தின் 7 ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் இன்னும் ஓர் அரசியல் படைப்பாக விடுதலை 2 ஆம் பாகம் கடந்த டிசம்பர் 20 இல் வெளியானது. மேலும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருந்தது. இப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் என்பதாலும், இசை இளையராஜா என்பதாலும் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். குறிப்பாக விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இளையராஜாவின் பின்னணி இசை வெளுத்து வாங்கியது. இருப்பினும், பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொறுத்தவரை, படம் எதிர்பார்த்த வசூலைய பெறுவதாகாத் தெரியவில்லை. இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து சற்று உயர்ந்தது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை வெளியிடும் டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படம் வெளியான முதல் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ .7 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ரூ.6.6 கோடியும், தெலுங்கில் ரூ.40 லட்சமும் வசூலித்ததாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் படத்திற்கான முன்பதிவு அதிகரித்து இருப்பினும் மீண்டும் வார நாட்களில் வசூல் வேகமாக குறையுமோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் விடுதலை திரைப்படம் வெளியாகி 7ம் நாளான நேற்று, இந்தியா அளவில் மட்டும் ரூ.30.45 கோடி வசூலித்து உள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் மொத்தமாக ரூ. 81 லட்ச ரூபாயும், தெலுங்கில் நேற்று ஒருநாளில் 10 லட்சம் வசூலித்து மொத்தமாக ரூ.2.01 கோடி வசூலித்ததாக தெரிகிறது. இதையடுத்து படம் வெளியான முதல் நாள் தற்போது வரை இந்திய அளவில் 31.95 கோடி ரூபாயே வசூலித்ததாகத் தெரிகிறது.