Prabhu Deva : 'நாட்டு நாட்டு' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபுதேவா..இதோ வீடியோ!
Nattu Nattu Song : நாட்டு நாட்டு பாடலுக்கு நடன கலைஞர்களுடன் பிரபுதேவா நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாகக் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. இந்த ஆண்டிற்கான 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் போட்டியிட்டது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த சிறந்த பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.
ஆரம்பத்திலிருந்தே ஆஸ்கர் விருதை வெல்வதற்கு வாய்ப்புள்ள பாடலாக நாட்டு நாட்டு பாடலுக்கு நேர்மறையான வாக்குகள் இருந்தது. முன்னணி இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது.
நாட்டு நாட்டு பாடலுக்கு ஏராளமான பிரபலங்களும், மக்களும் ஆடி மகிழ்ந்தனர். நாட்டு நாட்டு பாடலுக்கு, டெல்லியில் உள்ள தென் கொரிய தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் நடனம் ஆடிய வீடியோ, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின்,ரவீந்திர ஜடேஜா ஆடிய வீடியோ,தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா நடனம் ஆடிய வீடியோ என ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
அந்த வகையில், இந்திய திரைத்துறையில் நடன இயக்குநராக, பட இயக்குநராக, நடிகராக வலம் வரும் பிரபு தேவா நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடனக் குழுவினருடன் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.