நீ ஸ்கோர் பண்ண என்ன யூஸ் பண்ற.. நீ உண்மையா இல்ல.. ஜாக்குலினை சரமாரி கேள்வி கேட்ட தர்ஷா குப்தா.. வீடியோ இதோ!
Bigg Boss Tamil 8 : தர்ஷா குப்தா ஜாக்குலின் இருவரும் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் நீ ஸ்கோர் பண்ண என்ன யூஸ் பண்ற என தர்ஷா குப்தா ஜாக்குலினிடம் கேட்கிறார்.

நீ ஸ்கோர் பண்ண என்ன யூஸ் பண்ற.. நீ உண்மையா இல்ல.. ஜாக்குலினை சரமாரி கேள்வி கேட்ட தர்ஷா குப்தா.. வீடியோ இதோ!
பிக் பாஸ் தொடங்கி ஐந்தாவது நாள் ஆகிறது. இதில் ஆண்கள், பெண்கள் என இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடுகிறார்கள்.இதில் ஆண்கள் அணி ஒற்றுமையாக இருந்த போதிலும் பெண்கள் அணிக்கு உள்ளே சண்டைகள் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ரவீந்தர் ரஞ்சித் செய்த பிராங்க் ஆண்கள் அணிக்கு இடையே சண்டை வர காரணமாகிவிட்டது. இதற்கு ரஞ்சித் கேமரா முன் மனம் வருந்தி சாரி கேட்டார். ரவீந்தரும் இந்த விவகாரத்தில் அமைதி காத்தார். இப்பொழுது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி விட்டார் ரவீந்தர்.
தற்போது பிக் பாஸ் அணியில் ஆண்களா? பெண்களா? என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஜெஃப்ரி பேசியது தற்போது சர்ச்சைக்குரிய வகையில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.