மனைவியோடு வேற மாறி ஆட்டம்.. வைரலான ராஜமௌலி வீடியோ.. என்ன எனர்ஜி.. பறக்கும் கமெண்டுகள்..
பாகுபலி இயக்குநர் ராஜமௌலி தன் மனைவியோடு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ வைரலாகி தீயாய் பரவி வருகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது பிரம்மாண்டமான பாகுபலி எனும் படைப்பின் மூலம் பான்-இந்திய திரைப்படத்தின் முன்னோடியாக மாறினார். இதையடுத்து இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படமும் உலகளலில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஹிட் அடித்ததுடன் ஆஸ்கார் விருதுகளையும் வென்று இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தது.
வைரலாகும் ராஜமௌலி
இதையடுத்து இயக்குநர் ராஜமௌலி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத புள்ளியாக மாறினார். இவரது ஒவ்வொரு அசைவுகளையும் அவரது ரசிகர்கள் உற்று நோக்க வைத்துள்ளது. அப்படி இருக்கையில் தான் ராஜமௌலியின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், ராஜமௌலி அவரது மனைவி ரமாவுடன் இணைந்து ரவிதேஜா மற்றும் அசின் நடிப்பில் உருவான "லன்ச்கோஸ்தவா" என்ற தெலுங்கு பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர். தன் மனைவியுடன் ராஜமௌலி ஆடிய நடன அசைவுகளை பார்த்து அவரது ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.