கல்யாண குஷியில் சோபிதா போட்ட ஆட்டம்... வைரலாகும் வீடியோ.. ஒரே வெட்கம் தான் போங்க..
நாக சைதன்யாவை கரம்பிடிக்கும் முன்னதாக, கல்யாண குஷியில் நடிகை சோபிதா துலிபாலா நடனமாடிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தெலுங்கு பாரம்பரியப்படி நடைபெற்றது.
திருமண நிச்சயதார்த்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகசைதன்யா - சோபிதா இடையிலான உறவு குறித்தும், டேட்டிங் குறித்தும் உலா வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சோபிதாவிற்கு மஞ்சள் சடங்கு
நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், மக்கள் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், திருமணம் பற்றிய அறிவிப்புகளை இருவர் தரப்பிலிருந்தும் வெளிவராத நிலையில், கடந்த மாதம் சோபிதாவிற்கு உறவினர்கள் சூழ பாரம்பரிய முறைப்படி மஞ்சள் சடங்கு நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களை சோபிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
கொண்டாட்டத்தில் அகில்
அண்ணன் சைதன்யாவின் திருமணத்தை பார்த்து தம்பி அகிலும், மொத்த குடும்பமும் பூரிப்படைகிறது. இதில் அகில் விசில் அடிக்கும் சத்தம் மேள தாளங்களைக் கடந்தும் நம் காதுகளுக்கு வந்து சேர்கிறது. நாகார்ஜூனா சந்தோஷம் பொங்க மணமக்கள் அருகில் நிற்கிறார். மேடைஅருகே இருக்கும் அகில், சைதன்யா, சோபிதா கழுத்தில் தாலி கட்டும் சமயத்தில் பயங்கர சந்தோஷத்தில் விசில் அடிக்கிறார். இவர் விசில் அடிப்பதைப் பார்த்த சிலரும் விசில்களைப் பறக்க விட்டனர். இந்த வீடியோக்கள் எல்லாம் வைரலான நிலையில் தற்போது சோபிதாவின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆட்டம் போட்ட சோபிதா
சோபிதா துலிபாலா திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திருமண சடங்குகளில் பங்கேற்க மணப் பெண் அலங்காரம் செய்து கொண்டுள்ளார். அப்போது, கல்யாண குஷியில் இருந்த அவர், குஷியில் அல்லு அர்ஜுன் நடித்த சரைனோடு படத்தின் பிளாக்பஸ்டர் பாடலுக்கு நடனமாடினார். அப்போது "ஷ்ரத்தா, மேரி ஷாதி ஹோ ரஹி ஹை! அதாவது நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் இப்போது பலராலும் வைரலாக்கப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்