ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வரும் விடாமுயற்சி! படப்பிடிப்பும் முடிந்தது! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் ஹாலிவுட் பட மேக்கிங் அளவிற்கு படம் இருக்கப்போவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் அ. வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அஜித்தின் எந்த படமும் வெளியாகவில்லை. அஜித் பைக் ரைட் எனவும், ரேசிங் எனவும் பிஸியாக இருந்ததால் படங்கள் வெளியாகவில்லை எனப் பேசப்பட்டது.
ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்
இயக்குனர் மகிழ்திருமேனி வித்தியாசமான கதைக்களம் கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவர். இவரது இயக்கதில் விடாமுயற்சி படம் ஒப்பந்தமாகி ஒரு வருடத்திற்கும் மேல் எந்த வித அப்டேட் வராமல் இருந்து வந்தது. ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து படம் குறித்த தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக படத்தின் டீசரையும் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் விடாமுயற்சி வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் போட்டோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இப்படம் 2025 ஆம் ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் படம் ஏதும் இல்லாமல் இருந்த அஜீத்திற்கு ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது நல்ல கம் பேக்கை அளிக்கும்.
முடிந்த விடாமுயற்சி
விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த அதிகாரப்பூர்வ அதிகாரிப்பால் படத்தின் வெளியீடு விரைவில் இருக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. அஜித் ரசிகர்கள் சமீபத்தில் வெளியான அஜித்தின் இளமையான தோற்றத்தால் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது இந்த செய்தியும் அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
மேலும் மகிழ்திருமேனி நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், 'நீங்கள் எங்களை வழிநடத்தி சென்றீர்கள், உத்வேகமாகவும், தன்னம்பிக்கையும் நீங்கள் நீங்களாகவே இருந்து உங்களை அளித்ததற்கு எங்களது எல்லையற்ற அன்பும், நன்றியும். விடாமுயற்சி உண்மையிலே விடாமுயற்சியின் வெற்றியாக இருந்தது. இதற்கு குழு முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. நன்றி." எனக் குறிப்பித்துள்ளார்.
விடாமுயற்சி முன்பதிவு
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் வெளிநாடுகளில் இதன் முன் பதிவு தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முன்பதிவிலும் விடாமுயற்சி முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. லண்டன் மற்றும் அயர்லாந்தில் விடாமுயற்சி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததில் இது வரை பத்து லட்சத்திற்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 1 ராணவ், த்ரிஷா, தொகுப்பாளினி ரம்யா உட்பட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் எனவும் கூறப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்