Vidaamuyarchi: ரெட் ஜெயன்ட் விநியோகம்..விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி! - விபரம் உள்ளே!
Vidaamuyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது

Vidaamuyarchi: அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6 -2025 அன்று வெளியாக இருக்கிறது; இந்த நிலையில் இந்தப்படம் வெளியாகும் அன்றைய தினம் மட்டும், காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை என மொத்த ஐந்து காட்சிகளை திரையரங்கங்கள் திரையிட்டு கொள்ளலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.
Vidaamuyarchi: அஜித் நடிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘துணிவு’ படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளியில் இந்தத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தள்ளிப்போன ரிலீஸ்
முன்னதாக, பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனது.
விடாமுயற்சி திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து, ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறியிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விடா முயற்சி எப்படியான படம்?
‘விடாமுயற்சி’ படம் குறித்து மகிழ்திருமேனி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அதில் அவர் பேசும் போது, ‘இந்த திரைப்படத்தில் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றுதான் நடித்திருக்கிறார்; காரணம் என்னவென்றால் இந்த படத்தில் அவருக்கு பெரிய இண்ட்ரொடக்சன் கிடையாது.
பஞ்ச் டயலாக்ஸ் கிடையாது, இன்டர்வல்பிளாக் கிடையாது. ஒரு ஆக்சன் காட்சிக்கான பெரிய பில்டப் கிடையாது. ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு பிரச்சினை வந்தால் எப்படி சமாளிப்பான் என்ற ரீதியில் தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.‘விடாமுயற்சி’ திரைப்படம் ஆணாதிக்கத்திற்கான எதிரான திரைப்படம்; பெண்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் கனெக்ட் ஆகும்.' என்று பேசினார்.
முன்னதாக, விடாமுயற்சி தாமதம் ஆன போது, எழுந்த விமர்சனங்கள் குறித்து அஜித்- மகிழ்திருமேனியிடம் பேசியவற்றை கல்யாண் மாஸ்டர் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பகிர்ந்தார்.
படம் மட்டும் ஹிட் ஆனால்?
இது குறித்து அவர் பேசும் போது, ‘ மகிழ் திருமேனிக்கும், அஜித்திற்கும் இடையே சண்டை; அதனால்தான் படம் தாமதம் ஆகிறது உள்ளிட்ட வதந்திகளுக்கு அஜித் மகிழ்திருமேனியிடம் அஜித் ஒரு விஷயம் சொன்னார். அது என்னவென்றால், படம் மட்டும் ஹிட் அடித்து விட்டால், இதையெல்லாம் பற்றியெல்லாம் யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள்; ரசிகர்கள் உன்னை பாராட்டுவார்கள்; ஆகையால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், நீ உன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய். படத்தை முடித்து மக்களிடம் கொடு; அதன் பின்னர் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்.’ என்று பேசினார்.
அஜித் உடல்எடை குறைத்தது குறித்து பேசும் போது, ‘ அவர் முன்பிருந்தே உடம்பை குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்; இந்த நிலையில் திடீரென்று அவரை ஒல்லியாக பார்த்தவுடன் எனக்கு ஷாக் ஆகிவிட்டது. அப்படியே பில்லாவில் பார்த்த அஜித் போல இருந்தார்.
நான் அவரிடம் இதை இப்படியே கொண்டு செல்லுங்கள் சரியாக இருக்கும்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினேன். அதற்கு அவர், கண்டிப்பாக செய்ய வேண்டும்…. செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் கடுமையாக உழைக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்