Vidaamuyarchi Review : ‘காதல்.. சோகம்.. தேடல்.. மோதல்’ விடாமுயற்சி முதல் காட்சி விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi Review : ‘காதல்.. சோகம்.. தேடல்.. மோதல்’ விடாமுயற்சி முதல் காட்சி விமர்சனம்!

Vidaamuyarchi Review : ‘காதல்.. சோகம்.. தேடல்.. மோதல்’ விடாமுயற்சி முதல் காட்சி விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 06, 2025 09:33 AM IST

Vidaamuyarchi Review : ரெகுலராக காட்டி வந்த எல்லா இமேஜையும் உடைத்து விட்டு முற்றிலுமாக வேறு களத்தில் களம் இறங்கி இருக்கிறார் அஜித். ரொமாண்டிக் காட்சிகளிலும், உடைந்து அழும் காட்சிகளிலும் அஜித் காட்டி இருக்கும் நடிப்பு அல்டிமேட்.

Vidaamuyarchi Review : ‘காதல்.. சோகம்.. தேடல்.. மோதல்’ விடாமுயற்சி முதல் காட்சி விமர்சனம்!
Vidaamuyarchi Review : ‘காதல்.. சோகம்.. தேடல்.. மோதல்’ விடாமுயற்சி முதல் காட்சி விமர்சனம்!

மனைவியும் மனக்கசப்பும்

அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.

அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

வேறு மாதிரி அஜித்

ரெகுலராக காட்டி வந்த எல்லா இமேஜையும் உடைத்து விட்டு முற்றிலுமாக வேறு களத்தில் களம் இறங்கி இருக்கிறார் அஜித். ரொமாண்டிக் காட்சிகளிலும், உடைந்து அழும் காட்சிகளிலும் அஜித் காட்டி இருக்கும் நடிப்பு அல்டிமேட். மனைவியை இழந்து தவிக்கும் காட்சிகளில் அவர் காட்டி இருக்கும் நடிப்பு, அவரது அனுபவத்தின் முதிர்ச்சி. அழகு தேவதையாக வந்த த்ரிஷா நடிப்பிலும் நியாயம் செய்து இருக்கிறார். வில்லத்தனத்தில் அர்ஜூன், ஆரவை விட ரெஜினாவின் நடிப்பு சிறப்பு.

மகிழ் திருமேனி அஜித்தின் அனைத்தும் இமேஜையும் உடைத்து, அவரை பக்கத்து வீட்டு சாமானியனாக நடிக்க வைத்து இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் நச் ரகம். காட்சி மொழி வழியிலும் மகிழ் கதையை கடத்தி இருக்கும் விதம் அற்புதம்.

அசத்தி இருக்கும் அனிருத்!

படத்தின் ப்ளாட் பார்த்து புளித்த பழைய ஃபிளாட் என்றாலும், திரைக்கதையில் அடுத்தடுத்த முடிச்சுகளை போட்டு, அவர் அதை விவரிக்கும் விதம் நம்மை போர டிக்காமல் பார்த்துக் கொண்டது. படத்தில் இடம் பெற்று இருக்கும் ஆக்ஷன் காட்சிகள், ' அஜித்தே என்று கத்த வைக்கவிடவில்லை என்றாலும், ரசிக்க வைத்தது. படத்தின் மெதுவான திரைக்கதையை வேகம் கூட்ட அனி கொட்டி இருக்கும் சிரத்தை கொஞ்சம் நஞ்சமல்ல. அசர் பைஜானை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அஜித்திற்கு உரித்தான எந்த கமர்ஷியல் எலிமெண்டும் படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு என்கே ஜிங்கான கதையை கொடுப்பேன் என்ற மகிழ் கொடுத்த சத்தியம் மட்டும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்