VidaaMuyarchi :‘வாழு வாழ விடு.. அவங்க பொருளை எடுத்து அவங்களையே போட்ட தருணம்.. விடாமுயற்சியால் தவிக்கும் தமிழ் சினிமா!
தற்போது சின்ன படங்களுக்கு நல்ல ஜாக்பாட் content நன்றாக இருந்தால் பொங்கல் விடுமுறைக்கு நன்றாக ஓடும். நேற்று இரவே பல படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களது வினியோகஸ்தர்களிடம் பேச தொடங்கிவிட்டனர்.
விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் படம் வெளியாகாது என அறிவித்துவிட்டது லைகா நிறுவனம். புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தியை அறிய காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, இதை விட பெரிய அதிர்ச்சியான செய்தி 2024ன் இறுதி நாளில் கிடைத்திருக்காது. வெறுமனே இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமான செய்தி அல்ல, அதைத் தாண்டி, தமிழ் சினிமா உலகத்திற்கு இந்த அறிவிப்பு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக, சினிமா துறை சார்ந்து பயணிப்போர் கூறுகின்றனர்.
அவர்கள் பொருளை எடுத்து..
சினிமா ஊடகவியலாளரான கபிலன், விடாமுயற்சி கைவிடப்பட்டது, தமிழ் சினிமாவிற்கு எந்த அளவிற்கு இழப்பைத் தரும் என்பதை, அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அது உங்களின் பார்வைக்காக:
‘‘இது இன்டஸ்ட்ரிக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் தெரியுமா? கடைசி நிமிஷத்தில் இப்படி பின் வாங்கியதால் பெரிய படங்கள் திரைக்கு வர சாத்தியமில்லை.. (first copy ready ரெடியா இருந்தாலும் FMS Censor க்கு பத்து நாட்களுக்கு முன்னாடி அனுப்பனும். அதாவது நேற்று. OTT agreements வேற இருக்கிறது. படம் வெளியான 28முதல் 30 நாட்களுக்கு பிறகு ott release date வேற.. அவங்க monthly budget வேற பார்ப்பாங்க. இப்ப holidays ல இருப்பாங்க பலநிறுவனங்கள் அடுத்த திங்களுக்கு தான் மெயிலேயே ஓப்பன் செய்வார்கள் !)
சின்ன படங்களுக்கு வாய்ப்பு
தற்போது சின்ன படங்களுக்கு நல்ல ஜாக்பாட் content நன்றாக இருந்தால் பொங்கல் விடுமுறைக்கு நன்றாக ஓடும். நேற்று இரவே பல படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களது வினியோகஸ்தர்களிடம் பேச தொடங்கிவிட்டனர்.. குறைந்தது 5 சின்ன படங்கள் பொங்கலுக்கு வரும். என்ன opening இருக்காது.. wom pickup ஆகனும்.. அதுக்கு சினிமா பத்திரிகையாளர்களிடம் முன்னடியே படம் காட்டி ஒரு கருத்துருவாக்கம் செய்யனும்.. அப்பறம் முன்னாடியே Review என்னது முன்னாடியே Review வர செய்யனும்.. தியேட்டருக்குள் மீடியா அனுமதித்து public bite எடுக்க சொல்லனும்.. ராஜாகிளி, The Smile Man போன்ற படங்களை நான் உட்பட பல நிறுவனங்கள் பதிவேற்றவில்லை..
வாழு.. வாழ விடு..’’
என்று அந்த பதிவில் கபிலன் குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்