Vidaamuyarchi: சரிவு..சரிவு.. குறையும் மக்களின் எண்ணிக்கை.. விடாமுயற்சி பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இங்கே!
Vidaamuyarchi: இந்த வசூலின் வாயிலாக, 2 நாட்களில் உலகளவில் விடாமுயற்சி திரைப்படம் 66 கோடி வசூல் செய்திருப்பதாகவும், அதில் வெளிநாடுகளில் இருந்த கிடைத்த வசூல் 22.10 கோடி ரூபாய் ஆகும் என்று கூறியிருக்கிறது. - பாக்ஸ் ஆஃபிஸ் விபரம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக வெளியான திரைப்படம் ‘விடாமுயற்சி’.
இந்தப்படத்தின் 3 ஆம் நாள் வசூல் விபரங்களை பார்க்கலாம். இது குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் இணையதளமான Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி பார்க்கும் போது, இந்தியாவில் இந்தத்திரைப்படம் 3 வது நாளில் 10.52 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அத்துடன் இந்தப்படம் 46.77 கோடி வசூல் செய்து, 50 கோடி வசூலையும் நெருங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.
முதல் நாள் வசூல் எவ்வளவு?
கடந்த வியாழன் அன்று வெளியான விடாமுயற்சி திரைப்படம், வெளியான முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்ட அந்த தளம், வெள்ளிக்கிழமை அதன் வசூலில் 60.58 சதவீதம் குறைந்து, 10. 25 கோடி ரூபாய் வசூல் மட்டுமே செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தது.
மேலும், இந்த வசூலின் வாயிலாக, 2 நாட்களில் உலகளவில் விடாமுயற்சி திரைப்படம் 66 கோடி வசூல் செய்திருப்பதாகவும், அதில் வெளிநாடுகளில் இருந்த கிடைத்த வசூல் 22.10 கோடி ரூபாய் ஆகும் என்று கூறியிருக்கிறது. அத்துடன் நேற்றைய தினம், காலை காட்சியில், 32.92 சதவீதம் மக்களும், மதிய காட்சியில் 44.42 சதவீத மக்களும் படம் பார்த்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் திரைப்படம் வெளியானதால், படம் வெளியான அன்றைய தினம், அஜித் ரசிகர்கள் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர். அந்த கொண்டாட்டத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகர்களும், பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், சென்னையில் உள்ள வெற்றித் திரையரங்கில் நடிகை த்ரிஷா, ரெஜினா, அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர்.
விடாமுயற்சி எப்படி இருக்கு?
துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
மனைவியும் மனக்கசப்பும்
அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.
அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.
வேறு மாதிரி அஜித்
ரெகுலராக காட்டி வந்த எல்லா இமேஜையும் உடைத்து விட்டு முற்றிலுமாக வேறு களத்தில் களம் இறங்கி இருக்கிறார் அஜித். ரொமாண்டிக் காட்சிகளிலும், உடைந்து அழும் காட்சிகளிலும் அஜித் காட்டி இருக்கும் நடிப்பு அல்டிமேட். மனைவியை இழந்து தவிக்கும் காட்சிகளில் அவர் காட்டி இருக்கும் நடிப்பு, அவரது அனுபவத்தின் முதிர்ச்சி. அழகு தேவதையாக வந்த த்ரிஷா நடிப்பிலும் நியாயம் செய்து இருக்கிறார். வில்லத்தனத்தில் அர்ஜூன், ஆரவை விட ரெஜினாவின் நடிப்பு சிறப்பு.
மகிழ் திருமேனி அஜித்தின் அனைத்தும் இமேஜையும் உடைத்து, அவரை பக்கத்து வீட்டு சாமானியனாக நடிக்க வைத்து இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு ஃப்ரேமும் நச் ரகம். காட்சி மொழி வழியிலும் மகிழ் கதையை கடத்தி இருக்கும் விதம் அற்புதம்.
அசத்தி இருக்கும் அனிருத்!
படத்தின் ப்ளாட் பார்த்து புளித்த பழைய ஃபிளாட் என்றாலும், திரைக்கதையில் அடுத்தடுத்த முடிச்சுகளை போட்டு, அவர் அதை விவரிக்கும் விதம் நம்மை போர டிக்காமல் பார்த்துக் கொண்டது. படத்தில் இடம் பெற்று இருக்கும் ஆக்ஷன் காட்சிகள், ' அஜித்தே என்று கத்த வைக்கவிடவில்லை என்றாலும், ரசிக்க வைத்தது. படத்தின் மெதுவான திரைக்கதையை வேகம் கூட்ட அனி கொட்டி இருக்கும் சிரத்தை கொஞ்சம் நஞ்சமல்ல.
அசர் பைஜானை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அஜித்திற்கு உரித்தான எந்த கமர்ஷியல் எலிமெண்டும் படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றாலும், ஒரு என்கே ஜிங்கான கதையை கொடுப்பேன் என்ற மகிழ் கொடுத்த சத்தியம் மட்டும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்