Vidaamuyarchi: விமர்சனங்கள் தொடுத்த வில் அம்பு.. 2 வது நாளிலேயே இறையான விடாமுயற்சி; 11 நாட்களில் வசூல் எவ்வளவு தெரியுமா?
Vidaamuyarchi: விடாமுயற்சி திரைப்படம் வெளியான அன்றைய தினம் (பிப்ரவரி 6) 26 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், படம் எதிர்கொண்ட கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை (60 சதவீதம் அளவுக்கு) பாதித்தது. - விடாமுயற்சி வசூல்!

Vidaamuyarchi: அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகளவில் 11 நாட்களில் 128.85 கோடி வசூல் செய்திருப்பதாக Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, விடாமுயற்சி திரைப்படம் வார இறுதி நாளான நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), அதாவது திரைப்படம் வெளியாகி 11 வது நாளில் 1.85 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இதன் மூலம், விடாமுயற்சி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 77.85 கோடி வசூல் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியிருக்கிறது.
வசூல் விபரம்:
விடாமுயற்சி திரைப்படம் வெளியான அன்றைய தினம் (பிப்ரவரி 6) 26 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், படம் எதிர்கொண்ட கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை (60 சதவீதம் அளவுக்கு) பாதித்தது. இதனால், விடாமுயற்சி படத்தின் வசூல் அடுத்த நாள் 10.25 கோடியாக குறைந்தது.
ஆனால், 3 வது நாளில் மீண்டும் உயரத்தொடங்கிய படத்தின் வசூல் அந்நாளில் 13.5 கோடியாக இருந்தது. 4 வது நாளில் 14.5 கோடி வசூல் செய்த விடாமுயற்சி திரைப்படம், 5 வது நாளில் 3.2 கோடி ரூபாயும், 6 வது நாளில் 3.35 கோடி ரூபாயும், 7 வது நாளில் 2.2 கோடி ரூபாயும், 8 வது நாளில் 1.75 கோடி ரூபாயும், 9 வது நாளில் 1.15 கோடி ரூபாயும், 10 வது நாளில் 1.16 கோடி ரூபாயும் வசூல் செய்து இருப்பதாக
தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் இது வரை 75.41 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், தெலுங்கில் 2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், வெளிநாடுகளை பொறுத்தவரை விடாமுயற்சி திரைப்படம் 39 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், ஆக மொத்தமாக பார்க்கும் போது விடாமுயற்சி திரைப்படம் 128.85 கோடி வசூல் செய்திருப்பதாக Sacnilk தளம் குறிப்பிட்டு இருக்கிறது.
விடாமுயற்சி எப்படி இருக்கு?
துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
மனைவியும் மனக்கசப்பும்
அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.
மேலும் படிக்க: விடாமல் படத்தை தோளில் தூக்கி நின்ற அஜித்.. விடாமுயற்சியை பாராட்டிய டைரக்டர்..
அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்