Trisha Krishnan: சம்பந்தமில்லாத பதிவுகள்.. ஹேக்கர் செய்த வேலை.. முடங்கிய எக்ஸ் கணக்கு! - த்ரிஷா விளக்கம்!
Trisha Krishnan: ‘என்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அந்த ஐடியில் இருந்து வெளியாகும் கருத்துக்கள்’ - த்ரிஷா விளக்கம்!

Trisha Krishnan: நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது.
த்ரிஷாவின் கணக்கு முடக்கம்
நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் எக்ஸ் தளத்தில் இருந்து திடீரென்று சம்பந்தமில்லாத பதிவுகள் வெளியாகின. ஆனால், உடனே அவை டெலிட் செய்யப்பட்டு விட்டன. இந்த பதிவு நீக்க நடவடிக்கைகளை த்ரிஷாவின் பர்சனல் குழு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா இது குறித்தான விளக்கத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
த்ரிஷா விளக்கம்
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், ‘ என்னுடைய எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது. கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை, அந்த ஐடியில் இருந்து வெளியாகும் கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்தவையல்ல. நன்றி’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
த்ரிஷாவின் சோசியல் மீடியா கணக்கு ஹேக் செய்யப்படுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக அவரின் எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. இது அவர் பீட்டா அமைப்போடு தொடர்புடன் இருந்தற்காக செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இது குறித்து த்ரிஷாவின் அம்மா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அஜித்குமார் - த்ரிஷா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்து படம் விடாமுயற்சி. மகிழ் திருமேணி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அத்துடன் மற்றொரு ஹாலிவுட் படம் லாஸ்ட் சீன் அலைவ் என்ற படத்தின் சில காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.
பழிவாங்கிய த்ரிஷா
இந்த படத்தில் கணவன் - மனைவியாக அஜித் - த்ரிஷா வரும் நிலையில், அஜித்திடம், த்ரிஷா விவாகரத்து கேட்பார். இதற்கு அர்ஜுன் உதவியை அவர் நாடியிருப்பது தெரிய வரும். இதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்ய திருப்பங்கள் படத்தின் கதையாக உள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் இது மங்காத்தா பார்ட் 2 போல் இருப்பதாகவும், 13 வருடங்கள் கழித்து அஜித்தை ஒரு வழியாக த்ரிஷா பழிவாங்கிவிட்டதாகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் தனது பிரண்ட் அர்ஜுன் ஐடியாப்படி த்ரிஷாவை காதலிப்பது போல் நடிப்பார் அஜித். ஆனால் த்ரிஷா நிஜமாகவே அவர் காதலிப்பார்.
இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டதாக காட்டப்பட்டும் நிலையில், இந்த முறை மீண்டும் அர்ஜுன் உதவியுடன் அஜித்தை, த்ரிஷா ஏமாற்றுவது போல் காட்சி அமைந்துள்ளது. இதனை சோசியல் மீடியாவில் பதிவுகளாக வெளியிட்டு வந்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்