தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vidaa Muyarchi Team Is Gearing Up For A New Adventure At A New Location

Vidaa Muyarchi Update: நியூ லுக்கில் அஜித்..'விடாமுயற்சி' புதிய அப்டேட் என்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 29, 2024 05:01 PM IST

'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் உரிமையை வெளியீட்டுக்கு முன்பே பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விடாமுயற்சி
விடாமுயற்சி

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், பிரியா பவானி சங்கர், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா என பலர் நடித்து வருகின்றனர். எக்கசக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'விடா முயற்சி' ஆக்‌ஷனும் எமோஷனும் கலந்த கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக, அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். அத்துடன் முதல் முறையாக மகிழ் திருமேனியுடன் கைகோர்த்துள்ளார்.

இந்த சூழலில், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள புதிய பகுதிக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாகவும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளாா். '

விடாமுயற்சி' படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன.

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக ‘விடாமுயற்சி’ உள்ளது. அஜித்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் பொங்கலை முன்னிட்டு துணிவு படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக அஜித் படம் எதுவும் வெளியாகாத நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

’விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை வெளியீட்டுக்கு முன்பே பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்குமார். தற்போது இந்த படத்தை AK63 என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைக்க படக்குழுவினர் அணுகியருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.