Ajith Kumar: ‘கெத்த விடாத பங்கு’.. பைக் பாடம் எடுக்கும் அஜித்.. ஆர்ப்பரிப்பில் ரசிகர்கள்!- வைரல் வீடியோ!
நடிகர் அஜித் குமார் அண்மையில் அப்போல்லோ மருத்துவமனையில் வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அப்போது அவருக்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் தற்போது விடா முயற்சி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் அஜித் குமார் அண்மையில் அப்போல்லோ மருத்துவமனையில் வழக்கமாக செய்யும் உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அப்போது அவருக்கு காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அஜித்திற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் மீண்டும் அவர் தன்னுடைய பைக்கில் உலக சுற்றுப்பயணம் செய்யும் பயணத்திற்கு திரும்பி விட்டதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் படி அஜித் தன்னுடைய அடுத்தக்கட்ட பயணத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது தன்னுடைய சக ரைடருக்கு பைக் ஓட்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் வீடியோவை சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
துணிவு படப்பிடிப்பின் போதே பைக்கில் உலகம் முழுக்க பயணம் செய்ய வேண்டும் என்று முடிவெடித்த நடிகர் அஜித், நேபாளம் தாய்லாந்து, பூடான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளுக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் தொடர்பாக தவறான தகவல்கள் சகட்டு மேனிக்கு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேசி விளக்கம் கொடுத்தார்.
அவர் பேசும் போது, “நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னதாக, உடலை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அஜித் விரும்பினார். இதையடுத்துதான் அவர் மருத்துவமனைக்கு சென்றார்.
அஜித்திற்கு கண்ணிலும் கோளாறு இருக்கிறது. அதற்காக அவர் அடிக்கடி அதற்கான மருத்துவரை அணுகுவார் என்பது எனக்கு தெரியும். அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்த பின்னர், மருத்துவர் காதுக்கு பக்கத்தில் உள்ள நரம்பில் ஒரு சின்ன வீக்கம் இருக்கிறது. அதை ஆபரேஷன் செய்து விட்டு விடலாமா என்று கேட்க அஜித் அதற்கு ஓகே என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் அதற்குள் மீடியாவில் இது குறித்தான தவறான செய்திகள் பரவ ஆரம்பித்து விட்டன. இதையடுத்து சுரேஷ் சந்திராவிடம் இது குறித்து கேட்ட பொழுது அது ஒரு சின்ன ஆபரேஷன் என்றும் விரைவில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் சொன்னார்.
அஜித் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். நடிகர் சங்கத்தில் அதிகமான நண்பர்களைப் பெற்றவர் என்றால் அது அஜித்குமார் தான். நடிகராக நடித்து ஓய்ந்து, சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அநாதையாக சாகும் உறுப்பினர்களின் இறுதிச்சடங்குக்கு நிதி உதவி செய்தவர் நடிகர் அஜித்குமார்.
ஒருமுறை நாங்கள் அஜித்குமாரின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் கை நிறைய மாத்திரைகளை அள்ளி காண்பித்து, நான் இவ்வளவு மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறேன்.
என் உடலில் அவ்வளவு நோய் இருக்கிறது என்று சொன்னார். அஜித்திற்கு இதுவரை 8 ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன அவருக்கு முதுகுத்தண்டில் கீறல் விழுந்திருப்பது எனக்குத் தெரியும்.
நன்றாக நீங்கள் கவனித்தால் தெரியும், ரஜினிகாந்த் எப்படி ஆடுகிறாரோ அதற்கு ஏற்றார் போலதான் நடனவடிவமைப்பாளர்கள் நடனத்தை வடிவமைப்பார்கள். அதேபோலதான் அஜித்திற்கும் அவர்கள் வடிவமைக்கிறார்கள் காரணம் அவரது உடல் நலம்.
அவரால் விஜய் போன்று காலை வளைத்து, நெழித்தெல்லாம் ஆட முடியாது. அப்படி ஆடினால் அவரது உடல் நலத்திற்கு அது கேட்டை கொண்டு வந்து விடும். அதனால் தான் அவர் அப்படி இருக்கிறார். அஜித் குமார் தலையில் டை அடிக்காமல் இருப்பதற்கு காரணமும் டாக்டருடைய அட்வைஸ் தான்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்