தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vichitra, Dinesh Fight In Game Show

Vichitra, Dinesh: என்னம்மா இப்படி பண்றீங்களேமா.மீண்டும் மீண்டும் சண்டையா.. ஷூட்டிங்கை கேன்சல் செய்து வெளியேறிய விசித்ரா

Aarthi Balaji HT Tamil
Jan 30, 2024 11:01 AM IST

பிக் பாஸ் போட்டியாளர்கள் அண்டா கா கசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

விசித்ரா
விசித்ரா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அண்டா கா கசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அனன்யா, அக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, ரவீனா, தினேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ஷூட்டிங் தொடங்கும் முன்பே விசித்ரா வம்பு செய்து உள்ளார். அதனால் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆகி உள்ளது. இது ஒரு டீம் செயலாக இருந்தாலும் தினேஷுடம் இது பற்றி டீம் கேட்டு இருக்கிறார்கள்.

அப்போது திடீரென விசிர்தா, தினேஷ் என் அணியில் என்னுடன் நிற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி தினேஷ் உடன் டீம் பேசியபோது, ” விசித்ரா ஏற்கனவே பிக் பாஸில் என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மோசமாக பேசினார். இப்போது அவர் அருகில் ஒரே டீமில் இருப்பது சரியாக இருக்காது' என சொல்லிவிட்டாராம்.

தினேஷ் மறுத்த நிலையில் விசித்ரா நிகழ்ச்சி தயாரிக்கும் டீம் உடன் சண்டை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டாராம். 

இது fun ஷோ தான், எந்த டீம் என்பது பிரச்சனை இல்லை என அவர்கள் கூறி சமாதானப்படுத்த முயற்சித்தும் பலன் இல்லையாம். இதனால் டீம் ரவீனாவுடன் வந்த ஒருவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள முன்னாள் நடிகர் விசித்ரா, சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் 7 இல் காஸ்டிங் கவுச் அனுபவம் தன்னை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடிப்பை நிறுத்தியது என்று கூறினார்.

சங்கத்திடம் புகார் அளித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இது ஒரு தமிழ் திரைப்படத்தின் செட்டில் இல்லை என்று அவர் குறிப்பிட்டாலும், சமூக ஊடக பயனர்களில் ஒரு பகுதியினர் அவர் 2001 பாலகிருஷ்ணா நடித்த பாலேவடிவி பாசு பற்றி பேசுவதாக தெரிவித்தனர். இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.