Vetrimaran: விடுதலை படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வெற்றிமாறன்
இயக்குநர்கள் ஷங்கர், வெங்கட் பிரபுவுக்கு அடுத்தபடியாக வெற்றிமாறன் தனது விடுதலை 2 படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024இல் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக வெற்றிமாறனின் விடுதலை 2 இருந்து வருகிறது. இந்த ஆண்டில் வெளியான விடுதலை முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்க விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை விடுதலை 2 படத்திலும் பயன்படுத்த இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் தனது படங்களில் கம்யூட்டர் கிராபிக்ஸ், விஷுவல் எபெக்ட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவில் தவிர்த்து வந்தார். அத்துடன் கண்டிப்பாக தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துவதை பின்பற்றி வந்தார்.
இந்த சூழ்நிலையில் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோரின் இளம் தோற்றத்தை இந்த டீஏஜிங் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தை அவர் உபயோகப்படுத்தவுள்ளாராம். படத்தில் விஜய் சேதுபதி - மஞ்சுவாரியர் ஆகியோர் கணவன் மனைவியாக தோன்ற இருப்பதாகவும், இவர்கள் தொடர்பான காட்சிகள் 1960களின் பின்னணியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்துக்காக, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டீஏஜிங் தொழில்நுட்படம் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தளபதி 68 படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், ஒரு கதாபாத்திரத்துக்கு இந்த தொழில்நுட்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவும் பயன்படுத்தாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார் நடிப்பில் வெளியான கோஸ்ட் என்ற கன்னட படத்தில் பிளாஷ் பேக் காட்சியில் அவரது கதாபாத்திரம் மேற்கூறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்து இளமையான தோற்றத்தில் காட்டியிருந்தனர்.
எனவே, கெட்டப் மாற்றம், மேக்கப் என்ற மெனக்கெடாமல் இந்த டீஏஜிங் மூலம் நடிகர்களை இளமையான தோற்றத்தில் காட்டும் விதமாக இனி அடுத்தடுத்து சினிமாக்கள் அணிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்