Vetrimaaran: விஜய்க்காக அப்பவே அப்படி கதை! - ரிஜக்ட் செய்த எஸ்.ஏ.சி! - காம்போ மிஸ் ஆன கதை!
அட்லிதான் விஜயின் 69 ஆவது படத்தை இயக்க இருக்கிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடிந்து கொண்டிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்னர், தான் அரசியலில் இறங்கப்போவதாக கூறி தன்னுடைய அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சி சார்ந்த விவரங்களை அறிவித்தார் விஜய்.
அதில், தற்போது கமிட் செய்த திரைப்படங்களை முடித்து விட்டு, முழு நேர அரசியல் வாதியாக மாற இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம், தற்போது அவர் கமிட் செய்திருக்கும் தன்னுடைய 69 ஆவது படத்துடன் அவர் தன்னுடைய சினிமா கேரியரை முடித்துக்கொள்வார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் ஹெச். வினோத் விஜயிடம் கதை சொல்லி இருக்கிறார் என்றும், அட்லிதான் 69 ஆவது படத்தை இயக்க இருக்கிறார் என்றும் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் 69 ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்னதாக விஜய்க்காக கதை ஒன்றை வெற்றிமாறன் விஜயின் அப்பாவான எஸ்.ஏ.சியிடம் கூறியிருக்கிறார். அந்த நிகழ்வு குறித்து அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “ இது என்னுடைய சினிமாவின் தொடக்க காலம்.. அப்போது நான் Erich segal -உடைய கிளாஸ் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ஒரு கதையை எழுதி இருந்தேன்.
25 வருடங்களுக்குப் பிறகு ஏற்கனவே படித்த மாணவர்கள் மீண்டும் சந்திப்பதே அந்தப்படத்தின் ஒன்லைன். அதை அப்போது என்னுடைய நண்பரும், அடிதடி படத்தை இயக்கியவருமான சிவசக்தி கேட்டார். உடனே கதை நன்றாக இருக்கிறது. இதை விஜயின் அப்பாவான எஸ் ஏ சி சாரிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று சொல்லி என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.
அன்றைய நாள் அவரிடம் என்னால் ஒழுங்காக கதை சொல்ல முடியவில்லை. ஆனால் கதையைக் கேட்ட சிவசக்தி, இந்தக்கதையை நான் செய்கிறேன் என்று சொன்னார். இதைக்கேட்ட நான் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் அது நடக்க வில்லை” என்று பேசினார்.
டாபிக்ஸ்