‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!

‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 02, 2025 04:52 PM IST

நாங்கள் பாலுமகேந்திரா சாருடன் இணைந்து கதை நேரம், ஜூலி கணபதி உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றினோம். அப்போதிலிருந்து விக்ரம் சுகுமாரன் என்னுடைய படைப்புகளில் மிகவும் நெருக்கமாக அவரது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். -வெற்றிமாறன் பேச்சு!

 ‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ -  விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!
‘விக்ரமோட பெஸ்ட்ட தமிழ் சினிமா பாக்கல’ - விக்ரம் சுகுமாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன் பேச்சு!

முதல் நபர் விக்ரம்தான்.

அவரது இறப்பு குறித்து பேசிய வெற்றிமாறன், ‘நான் திரைத்துறையில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்த பொழுது என்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய முதல் நபர் விக்ரம்தான். சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நட்பு விக்ரம் உடையது தான்.

நாங்கள் பாலுமகேந்திரா சாருடன் இணைந்து கதை நேரம், ஜூலி கணபதி உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றினோம். அப்போதிலிருந்து விக்ரம் சுகுமாரன் என்னுடைய படைப்புகளில் மிகவும் நெருக்கமாக அவரது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

பல இடங்களில் நான் இதனை சொல்லி இருக்கிறேன் ஆடுகளம் படத்தில் இருந்த மதுரை தன்மைக்கும், தனுஷின் நடனத்திற்கும் அச்சாரப்புள்ளியாக இருந்தது விக்ரம் சுகுமாரன்தான்.

ஈடு செய்ய முடியாத இழப்புதான்

மதயானை கூட்டம் படத்தை பார்த்த பொழுது, அவரது சினிமா கிராஃப்ட் எவ்வளவு ஸ்டாராங்கானது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரது சிறந்தபடம் தமிழ் சினிமாவிற்கு கிடைக்காமல் போய்விட்டது. அவரது உயிரிழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான்’ என்று பேசினார்.

மாரடைப்பால் பேருந்தில் மரணம்

இவரது இறப்பு குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரிக்கையில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. இவரது மறைவு செய்தி கேட்டு அவருக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர்

தமிழ் சினிமாவில் ரியாலிட்டி சினிமாக்களுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில் இயக்குநர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் வெளியான மதயானைக் கூட்டம் படம் ெரும் வெற்றி பெற்றது. கதிர், ஓவியா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மதுரை மண் சார்ந்த மக்களின் வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருந்தது என பலரும் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்தப் படத்தின் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றது.

விக்ரம் சுகுமாரன் படங்கள்

இதையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் விக்ரம் சுகுமாரன். பின், அவர், நடிகர் சாந்தனுவை வைத்து இராவணக் கோட்டம் படத்தை இயக்கினார். இந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

நடிகர் விக்ரம் சுகுமாரன்

விக்ரம் சுகுமாரன் சினிமா இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.