மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?

மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?

Malavica Natarajan HT Tamil
Nov 27, 2024 09:07 AM IST

விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கோபமாக தனது பேச்சை முடித்துக் கொண்டு மைக்கை வைத்தது தற்போது வைரலாகி வருகிறது.

மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?
மேடையில் கடுப்பேற்றிய நபர்.. பாதியிலேயே பேச்சை முடித்து கிளம்பிய வெற்றிமாறன்.. என்ன நடந்தது?

விடுதலை 2 ஆடியோ லான்ச்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். விடுதலை பாகம் 1 படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

சர்வதேச பாராட்டில் விடுதலை

மேலும் விடுதலை பாகம் 1 படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுக்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

விடுதலை 2

விடுதலை முதல் பாகத்தில் விஜய் சேதுபதியை விட சூரியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் முழுவதும் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யாப், கிஷோர், கென் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

4 வருட உழைப்பு

இந்நிலையில், இப்படம் இந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், " ஒரு படம் எடுக்க நிறைய பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. கண்மூடித்தனமாக ஒருவர் மேல் வைக்கும் நம்பிக்கையின் காரணமாகத் தான் ஒரு படம் உருவாகிறது. விடுதலை படத்தை நாங்கள் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தோம். இப்போது படம் முடிய 4 வருடங்கள் ஆகியுள்ளது.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, கல்யாணம் செய்தவர்கள், இப்போது குழந்தைகளையே ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அத்தனை வருடங்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக வேலை செய்துள்ளோம்.

நேரம் இல்லை

விடுதலை முதல் பாகம் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் வேலை செய்த அனைவரின் பெயரையும் எழுதி வைத்து படித்தேன். ஆனால், இந்த முறை அதற்கான நேரம் இல்லை. படத்திற்கான வேலைகள் நிறைய இருக்கிறது.

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், புரொடக்ஷன் என படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர்" என்றார்.

கடுப்பான வெற்றிமாறன்

அப்போது, வெற்றிமாறனிடம் குறுக்கிட்ட நபர் ஒருவர், சிலரது பெயர்களை குறிப்பிடும் படி கூறினார். இதனால் கடுப்பான வெற்றிமாறன், "நான் யார் பெயரையும் சொல்லல. டீம்ன்னா எல்லாரும் தான். எல்லாரும் சேர்ந்தது தான டீம்" என சற்று கோபமாக பேசினார்.

பின், அவர் அனைவருக்கும் நன்றி எனக் கூறி தனது பேச்சை முடித்து மைக்கை வேகமாக வைத்துச் சென்றார். இருந்தும் அவரால் அந்த நபர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபமாக இருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.