ரியல் ஜோடிகளாகும் விஜய் டிவி பிரபலங்கள் வெற்றி வசந்த் - வைஷ்ணவி! க்யூட் விடியோ பகிர்வு
விஜய் டிவி சிறகடிக்க ஆசையில் நடித்து வரும் வெற்றி வசந்த், பொன்னி சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி ஆகியோர் திருமணம் செய்ய உள்ளார்கள். இதுதொடர்பாக க்யூட் விடியோவும் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சீரியல் பிரபலங்களில் சிறகடிக்க ஆசை தொடர் வெற்றி வசந்த், பொன்னி தொடர் வைஷ்ணவி சுந்தர் ஆகியோர் ரியல் ஜோடியாக ஆக இருக்கிறார்கள். இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சீரியலில் ஸ்டார் ஜோடி
தமிழ் சீரியல் புதிய ஸ்டார் ஜோடிகளாக வெற்றி வசந்த் - வைஷ்ணவி சுந்தர் ஆகியோர் ஆக இருக்கிறார்கள். வெற்றி வசந்த் தனது இன்ஸ்டா பதிவில் சிவகார்த்திகேயனின் ரெமா படத்தின் பாடல் ஒலிக்க தனது வருங்கால மனைவியுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடும் விடியோவை பகிர்ந்துள்ளார்.
தனது பதிவில், "என்றென்றும் பிரிந்திடாமல். இன்ஸ்டா குடும்பம் மற்றும் நண்பர்கள்
இதை சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,
இந்த வாரத்துக்குள் எங்கள் இருவரும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. உங்கள் அனைத்து வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
இரண்டாவது மாத காதல் வாழ்த்துக்கள் மா. என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கி வாழ்வோம். லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி வசந்த் - வைஷ்ணவி காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து என்ற கேரக்டரில் தோன்றி தனது நடிப்பால் முத்திரை பதித்து வருகிறார் வெற்றி வசந்த. தனது எதார்த்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் கொண்டவராக இருந்து வருகிறார்.
அதை போல் ராஜா ராணி 2 சீரியல் மூலம் கவனம் ஈரத்தவர் நடிகை வைஷ்ணவி சுந்தர். கேரக்டர் ரோல்களில் நடித்து கொண்டிருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடர் மூலம் கதையின் நாயகியாக ஆகியுள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த இரு பிரபலங்களும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்கள். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களது திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம்
சீரியல் பிரபலங்களான வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன், இந்த வாரம் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சிம்பிளாக நடைபெற இருக்கிறது. இதன் பின்னர் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்க திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
சீரியலில் அண்ணன்
வைஷ்ணவி நடித்து வரும் பொன்னி சீரியலில் வெற்றி வசந்த் சிறிய கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் வைஷ்ணவியின் அண்ணனாக அவர் நடித்திருப்பார். சீரியலில் அண்ணனாக நடித்த இவர் தற்போது வைஷ்ணவியை கரம் பிடிக்க இருக்கிறார். வெற்றி வசந்தின் இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவி நடிகைக்கு திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரேட்டிங் கொண்ட சீரியலான சுந்தரி சீரியல் நடிகைக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த சீரியலில் நெகடிவ் கலந்த கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஸ்ரீகோபிகா, வருண்தேவ் என்பவரை திருமணம் செய்துள்ளார். பெற்றோர் ஏற்பாடு செய்த இந்த திருமணம் கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.