மனுஷி பட விவகாரம்.. சென்சார் குழுவிற்கு எதிராக வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு முன்பு என்னுடைய தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்சார் குழுவில் இருப்பவர்கள் படம் குறித்தான தங்களது தனிப்பட்ட பார்வை தொடர்பான கருத்துக்களை கூறவில்லை.

சென்சார் குழுவிற்கு எதிராக வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தான் தயாரித்து, ஆண்ட்ரியா நடிப்பில் உருவான படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், செப்டம்பர் 2024 -ல் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மனுஷி படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்க மறுத்துவிட்டது. அதற்கான காரணங்களாக மனுஷி திரைப்படம் மாநிலத்தை மோசமாக சித்தரித்து இருப்பதாகவும், படம் இடதுசாரி கம்யூனிசத்தையும், நடப்பு கம்யூனிசத்தையும் குழப்பி இருக்கிறது என்றும் கூறியது.