பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..

பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..

Malavica Natarajan HT Tamil
Nov 12, 2024 01:32 PM IST

மூத்த பெங்காலி நடிகரும் பிரபல நாடக ஆளுமையுமான மனோஜ் மித்ரா இன்று காலை கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85.

பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..
பிரிவினை, கொடுங்கோல் ஆட்சி.. சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதமாக சினிமாவை மாற்றிய ஞானி மறைவு..

வயது மூப்பு மற்றும் சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்ட மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8.50 மணியளவில் உயிரிழந்தார்.

அரசியல் பிரச்சனைகளை முன்வைத்த நாயகன்

பெங்காலி நாடக ஆளுமையான மனோஜ் மித்ரா, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாடகங்கள் மற்றும் கூத்துகள் எழுதுவதற்கும் இயக்குவதற்கும் மிகவும் பெயர் பெற்றவர். அவரது நாடகங்கள் ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் போராட்டத்தையும் கோடிட்டுக் காட்டின.

ஜமீன்தார்கள் விவசாயிகளை ஒடுக்கி ஆண்டு வந்ததை மையப்படுத்தி இவர் உருவாக்கிய படம், 'பஞ்சராமர் பகன்'. 1980 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பஞ்சாராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த தபன் சின்ஹாவின் கதாப்பாத்திரத்தை மக்கள் மனதில் அழியாததாக்கினார். இவர் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். மனோஜ் மித்ரா திரைப்பட கதைகளை எழுதுவதைத் தவிர சுமார் 100 தனி நபர் நாடகத்தையும் முழு நீள நாடகத்தினையும் உருவாக்கியுள்ளார்.

மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும் மனோஜ் மித்ரா

இவரது முழு நீள நாடகங்களில் 'நரக் குல்ஜார்', 'அஸ்வத்தாமா', 'சக்பங்கா மது', 'மெஷ் ஓ ராகாஷ்', 'கல்போ ஹெகிம் சாஹேப்', 'ராஜ்தர்ஷன்', 'அலோகானந்தர் புத்ரா கன்யா', 'சஜானோ பகன்', 'சாயார் பிரசாத்' மற்றும் 'ஜெனே ஷுனே பிஷ்' ஆகியவை மக்கள் மீதான அடக்குமறைகளுக்கு எதிராக இயக்கப்பட்ட முக்கிய நாடகங்கள். நாட்டின் பிரிவினை, வங்காளத்தின் நக்சலைட் இயக்கம், ஆளும் வர்க்கத்தின் கொடுங்கோன்மை, மத அடிப்படைவாதம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் மித்ராவின் நாடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டன.

கல்வியாளரும் மொழிபெயர்ப்பாளருமான மௌசுமி ராய் சௌத்ரி, மனோஜ் மித்ராவின் நாடகங்களில், மனசாட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு தார்மீக அடிப்படையிலான உணர்வுகளை மட்டுப்படுத்தப் படுவதில்லை. இங்கே மனசாட்சி என்பது அரசியலின் ஒழுங்குபடுத்தப்படாத விதிகளுக்கு எதிராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தேடி வந்த பாலிவுட் வாய்ப்பு

ஒரு நாடகத்தை எழுதுபவராகவும் இயக்குபவராகவும் மட்டும் இல்லாமல், மனோஜ் மித்ரா சத்யஜித் ரேயின் கிளாசிக் படங்களான 'கரே பைரே', 'கனசத்ரு' உட்பட 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தபன் சின்ஹாவின் 'அதாலத் ஓ ஏக்தி மே' மற்றும் 'வீல் சேர்' ஆகியவற்றிலும் மித்ரா பணியாற்றினார்.

1984 ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் அடித்த 'சத்ரு' படத்திற்குப் பிறகு, மித்ராவுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார், இது நாடகத்தில் அவரது ஈடுபாட்டை பாதிக்கும் என்று அஞ்சினார்.

குடும்பத்தின் கட்டுப்பாட்டால் வந்த ஆசை

மனோஜ் மித்ரா டிசம்பர் 22ம் தேதி 1938ம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அரசு அதிகாரி. வழக்கமாக இவரது வீட்டில் துர்கா பூஜையின் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் வீட்டில் நாடகங்கள் நடித்தாலும், குழந்தைகள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதுவே, நாடகங்கள் மீதான அவரது ஆர்வத்தை அதிகரித்தன.

மித்ரா தனது 12வது வயதில் குடும்பத்துடன் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து நிரந்தரமாக இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். இங்கு அவர், 1960 இல் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

21 வயதில் 90 வயது முதியவராக நடித்து கவர்ந்த மகா நடிகன்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நாட்களில், இவர் சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதினார். அவரது 'மிருத்யூர் சோக்கே ஜல்' நாடகம் மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசைப் பெற்ற பிறகு, அவர் இந்தத் துறையில் மட்டுமே கவனம் செலுத்தினார். 'மிருத்யுர் சோக்கே ஜல்' படத்தில் 21 வயது இளைஞர் எவ்வித சிரமமும் இன்றி ஒரு வயதான மனிதராக உருமாறினார், இதையடுத்து இவரது நடிப்புத் திறமை பல மூத்த நடிகர்களை ஈர்த்தது.

நாடக ஆசிரியருக்கு நாடகத்துறையில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக சங்கீத நாடக விருது மற்றும் ஆசியாடிக் சொசைட்டி விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் மித்ரா 'சுந்தரம்' நாடகக் குழுவின் தலைவராகவும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும் இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.