K.R.Vijaya: 'கல்யாணம் ஆகியும் என் கணவர் ரெஸ்ட் எடுக்க விடல.. ஓடிட்டே இருந்துட்டேன்'- கே.ஆர்.விஜயா பேட்டி
K.R.Vijaya: கல்யாணம் ஆனதால் வீட்டிலேயே இருந்தால் சோம்பேறித்தனம் வந்துவிடும் எனச் சொல்லி என் கணவர் என்னை நடிக்க அனுப்பிவிட்டார் என நடிகை கே.ஆர். விஜயா சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

K.R.Vijaya: தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையான கே.ஆர். விஜயா சில மாதங்களுக்கு முன் சிட்டி பாக்ஸ் மீடியா எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தன் சினிமா வாழ்க்கை, திருமணம், குழந்தைகள், குடும்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
என்னோட பேரையே மாத்திட்டாரு
அப்போது, "நான் 1963ல சினிமாவுக்கு நடிக்க வந்தேன். இப்போ இத்தனை வருஷம் கடந்துருச்சு. இதெல்லாம் எனக்கு கிடைச்ச பாக்கியமா நான் நினைக்குறேன். உண்மைய சொல்லனும்ன்னா என் நிஜ பேரு தெய்வநாயகி தான். நான் ஒரு ஷூட்டிங்கிற்காக மேக்கப் டெஸ்ட் செய்ய போயிருந்தேன். அப்போ அங்க எம்.ஆர்.ராதா சார் இருந்தாரு.
அவரு என்கிட்ட பேரு என்னென்னு கேட்டாரு. அப்போ தெய்வநாயகின்னு சொன்னதும் இன்னும் என்ன பழைய ஃபேஷன்ல பேர் வச்சிருக்க. இந்த விஜயா மாதிரி எதையாவது வைக்க வேண்டியது தானன்னு கேட்டாரு. அவரு வாய் முகூர்த்தம் அப்படியே வச்சு அந்த பேர் நிலைச்சிருச்சு.
எல்லா பொருப்பும் என் தலையில
எங்க வீட்டுல 5 பொன்னுங்க. நான் தான் மூத்த பொன்னு. என் தலையில தான் எல்லா பொருப்பும் வந்தது. என் சின்ன தங்கச்சி ரொம்ப ஜாலியா இருப்பா. என் தங்கச்சி ஒருமுற ரொம்ப முடியாம இருந்தா. கிட்டதட்ட அவ இறந்துட்டான்னு எல்லாம் முடிவு பண்ணுன சமயத்துல நான் கோவில்ல பூஜை பண்ணிட்டு பால் எடுத்துட்டு வந்து அவளுக்கு கொடுத்தேன். அதுக்கு அப்புறம் அவ பொழச்சிகிட்டா. இதெல்லாம் மறக்க முடியாத ஒன்னு.
எந்த எதிர்பார்ப்பும் இல்ல
எல்லாரும் சொல்லுவாங்க எங்க அப்பா எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில இருந்தாருன்னு. ஆனா எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அவரு நாடக கம்பெனியில இருந்து ஆர்மிக்கு போயி அதுக்கு அப்புறம் கல்யாணம் ஆகி பிறந்தவங்க தான் நாங்க எல்லாம். அதுனால அத பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியல.
நான் சினிமாவுக்கு வந்த புதுசுல சொன்ன வேலை எல்லாம் செஞ்சேன். புதுசா வர்றவங்க பெருசா எல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது. எனக்கு படிப்பும் இல்ல. எதுவும் இல்ல. பெருசா சாதிக்கணும்ன்னு எல்லாம் தோணினதும் இல்ல.
பதற்றமே இல்ல
நான் முதல் படம் பண்ணும் போது எனக்கு 14, 15 வயசு தான் இருக்கும். அந்த வயசுல எனக்கு கதாநாயகியா நடிக்கிறதோ. படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் அது எப்படி போகும், நம்மள எப்படி பாப்பாங்கன்னு எந்த பதற்றமும் இல்ல. எல்லாம் பெரிய பெரிய ஹீரோ. எல்லாரும் என்ன சின்ன பிள்ளயா நெனச்சி சொல்லி கொடுத்தாங்க.
என் கணவர் என்ன விடல
நானே திருமணத்துக்கு அப்புறம் நடிக்க வேணாம்ன்னு தான் இருந்தேன். ஆனா, எங்க வீட்டுக்காரரு தான் 3 மாசம் ஆகிடுச்சு. இதுக்கு மேல வீட்டுல இருந்தா சோம்பாறி ஆகிடுவன்னு சொல்லி சொல்லியே என்ன திரும்ப அனுப்பிட்டாரு. நீ சாகுற வரைக்கும் நடிக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்கணும். தொழில விட்டுக் கொடுக்கக் கூடாது. உன்னால முடியுற வரைக்கும் நடின்னு சொல்லுவாரு.
எல்லாரும் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க
குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கூட நான் அவர்கிட்ட கேட்டேன். எப்படி குழந்தையையும் சினிமாவையும் மெயின்டெயின் பண்ண முடியும்ன்னு. அவரு காலையில வேலைக்கு போயிட்டு வந்த மாதிரி நீயும் பண்ணுன்னு சொல்லிட்டாரு. அதெல்லாம் சினிமாவுல முடியுமான்னு கேட்டதுக்கு நடத்திக் காட்டுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் ஷூட்டிங்ல எல்லாரும் அவள சீக்கிரம் விட்ருங்க. அவளுக்கு வீட்ல வேலை இருக்கும்ன்னு சொல்லி ரெக்கமெண்ட் பண்ணிட்டாங்க. அதுனால எனக்கு அது ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்தது.
சினிமாவத் தவிர எதுவும் தெரியல
நான் சினிமாவுக்கு வந்த 10 வருஷத்துலயே 100 படம் நடிச்சுட்டேன். எனக்கு நடிக்கனும், சாப்பிடனும், தூங்கனும் இத தவிர வேற எதுவும் தெரியாது. இப்போ வரைக்கும் அதைத் தவிர வேற எதுவும் தெரியாது.
எனக்கு ஷூட்டிங் தவிர கதை பேசக் கூடத் தெரியாது. எனக்கு தியேட்டர், ஸ்விம்மிங் பூல் எல்லாம் வீட்லயே இருக்கு. அதுனால எதுக்கும் வெளிய போக மாட்டேன். அப்படியும் எதாவது வேணும்ன்னா என்னோட வீட்டுக்காரர் கூட்டிட்டு போயிடுவாங்க" என்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்