நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய விமானப்படையினர்! தேசியக் கொடியுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்
முன்னாள் விமானப்படை வீரரான நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப்படைத் துறையினர் தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தி அவரது உடலை தகனம் செய்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷின் இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெற்றது. அவரது உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது.
விமானப்படை மரியாதை
அப்போது, விமானப்படையினர், நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினர், பின் விமானப் படை மற்றும் தேசியக் கொடியை டெல்லி கணேஷ் உடலுக்கு போர்த்தி, அவரது உடலை மிகுந்த மரியாதையுடன் தகனம் செய்தனர்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
