Cook With Comali: செருப்பாலே அடிப்பேன்... உனக்கு உரிமையே இல்ல... சூடான வெங்கடேஷ் பட்
Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை- பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வெங்கடேஷ் பட் காட்டமாக தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் அதில் பங்கேற்பாளராக வந்த பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பூகம்பமாக மாறி, சோசியல் மீடியாவில் நான் ஸ்டாப்பாக சுழன்று வருகிறது.
இதுகுறித்து, பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவரும் கடந்த சீசனிலேயே இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருபவருமான வெங்கடேஷ் பட் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது மோசமான ஒன்று
மணிமேகலை- பிரியங்கா இருவருக்கும் இடையிலான பிரச்சனை அவர்களுக்கான தனிப்பட்டது. இது குறித்து பிறர் கருத்து தெரிவிப்பதே மோசமான ஒன்று. இவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என தெரியாமல் பேசுவதே மிகவும் தவறான ஒன்று. நான் இருவருடனும் பணியாற்றி உள்ளேன். என்னுடைய கல்யாணத்தை தொகுத்து வழங்கியர் மணிமேகலை. நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் என் கௌரவம் குறையாமல் பார்த்துக் கொண்டவர் பிரியங்கா. தன் திறமையால் இவ்வளவு பெரிய இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர்.