தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

Kalyani Pandiyan S HT Tamil
May 18, 2024 10:27 AM IST

Thalapathy Vijay: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்தே விஜயின் ‘தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு
Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

ட்ரெண்டிங் செய்திகள்

அந்தப்புகைப்படத்தில் நடிகர் விஜய் முன்னால் பல கேமராக்கள், வெவ்வேறு கோணங்களில் அவரை படம் பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் வயதான தோற்றத்தைக்கொண்டதாகவும், இன்னொரு கதாபாத்திரம் இளமையான தோற்றத்தைக்கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.

நடிகர் விஜயின் இளமை தோற்றம் 

நடிகர் விஜயின் இளமையான தோற்றம் சம்பந்தமான காட்சிகளை உருவாக்குவதற்காக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும், முதன்மையான விஎஃப் எக்ஸ் ஸ்டுடியோக்களில் ஒன்றான Lola VFX ஸ்டியோவை கோட் படக்குழு கமிட் செய்திருந்தது.அங்கு விஜய் தொடர்பான விஎஃப்எக்ஸ் காட்சிகள் தொடர்பான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

தற்போது அது சார்ந்த பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன. இந்த ஸ்டியோவில் முன்னதாக The Irishman உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் தொடர்பான விஎஃப் எக்ஸ் பணிகள் நடைபெற்றது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில், கமல்ஹாசனை இளமையாக காட்டும் டி ஏஜிங் வி எஃப் எக்ஸ் சார்ந்த பணிகள் இங்குதான் நடைபெற்றன. 

கோட் திரைப்படம் ரீமேக்கா

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்தே விஜயின்  ‘தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் உருவாகி வருவதாக கூறப்பட்டது. ஜெமினி மேன் படத்தில் வில் ஸ்மித் மூன்று ரோலில் நடித்திருப்பார். 

அப்படியானால் விஜய்க்கு இந்த படத்தில் மூன்று ரோல் இருக்கலாம் எனவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள் எனவும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அதனை மறுத்த வெங்கட் பிரபு, கோட் திரைப்படம் ரீமேக் இல்லை எனவும், அது தன்னுடைய கதை எனவும் கூறியிருந்தார்.

முன்னதாக, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ம்ற்றும் டைட்டில் புத்தாண்டையொட்டி வெளியானது. அதன் படி, படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதும், விஜய் இந்தப்படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது போஸ்டர்களும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இந்தப்படத்தில் இருந்து அண்மையில் விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்