CustodyTeaser:மிரட்டும் நாகசைதன்யா; வேறு ரக வெங்கட்பிரபு..கஸ்டடி டீசர் ரிலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Custodyteaser:மிரட்டும் நாகசைதன்யா; வேறு ரக வெங்கட்பிரபு..கஸ்டடி டீசர் ரிலீஸ்

CustodyTeaser:மிரட்டும் நாகசைதன்யா; வேறு ரக வெங்கட்பிரபு..கஸ்டடி டீசர் ரிலீஸ்

Kalyani Pandiyan S HT Tamil
Mar 16, 2023 05:33 PM IST

நாகசைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கஸ்டடி படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது

நாகசைதன்யா
நாகசைதன்யா

 

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் நாக சைதன்யாவை வைத்து இயக்கி வரும் படம் கஸ்டடி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வெள்ளித்திரையில் முதன்முறையாக நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் இதுவாகும்.

கஸ்டடி படத்தில் அரவிந்த சுவாமி வில்லனாக நடிக்கிறார். அவருடன் படத்தில் சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி, பிரேமி விஸ்வநாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

அதிக பொருட்செலவிலான தயாரிப்பு மற்றும் உயர்தரமான தொழில்நுட்பத்துடன் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தை தயாரித்து வருகிறார்.கஸ்டடி திரைப்படம் மே 12 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.