கோட் படத்தில் நாயகன் இன்ஸ்பிரேஷன்.. ‘விஜய் சார இந்த சினிமா ஒழுங்கா பயன்படுத்தல.. அவர மாதிரி’ - வெங்கட் பிரபு
விஜய் சார் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா, கமர்சியல் கட்டத்திற்குள் அடக்கி வைத்து விட்டது. அவரை இந்த சினிமா உலகம் பெரிதாக பயன்படுத்த வில்லை - வெங்கட் பிரபு
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் கோட். இந்தப்படத்தில் பல காட்சிகளில் நடிகர் விஜய் சிறப்பாக நடித்திருப்பார். இந்த நிலையில், இது குறித்து ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்
இது குறித்து அவர் பேசும் போது. ‘விஜய் சார் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா கமர்சியல் கட்டத்திற்குள் அடக்கி வைத்து விட்டது. அவரை இந்த சினிமா உலகம் பெரிதாக பயன்படுத்த வில்லை
கோட் படத்தில் விஜய் சார் தன்னுடைய பையனான ஜீவனை காணவில்லை என்றவுடன் அந்த எமோஷனை மிக அழகாக வெளிப்படுத்தினார். முதலில் அவர் அந்த சீனில் மிக மிக எமோஷனலாக நடித்தார். நான் அதை பார்த்தவுடன், ஒன் மோர் என்று கேட்டேன். இதை பார்த்த விஜய் சார் ஏன் என்று கேட்டார்.
எமோஷன் வேண்டாம்
உடனே நான் இந்தளவிற்காக எமோஷன் வேண்டாம். அவன் மீண்டும் கிடைப்பான் என்ற நம்பிக்கையை வைத்துக் கொள்ளுங்கள். அந்த புள்ளியிலிருந்து நடியுங்கள் என்று கூறினேன். உடனே அவர் ஓஹோ அப்படி வேண்டுமா? என்று கேட்டு பின்னர் நான் கேட்ட மீட்டரில் நடித்துக் கொடுத்தார்.
முதலில் அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் தான் தனது மகன் ஜீவனை சந்திக்க வருவார். மகன் இறந்தது தெரிந்ததும் மிகவும் எமோஷனலாக அழுவார். உண்மையில் அந்த சீனுக்கு நாயகன் படம் தான் எங்களுக்கு முன் உதாரணமாக இருந்தது. அதாவது அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது, தெரியாமல் தான் அவர் காரில் வருவார். இங்கு வந்து பார்க்கும்பொழுது ஜீவன் இறந்து கிடப்பார். அதை பார்த்தவர் மிக மிக எமோஷனலாக அழுவார்.
அவர் காரில் இருந்து இறங்கி பையனை பார்த்து அழ வேண்டும் அது ஒரு சிங்கிள் ஷாட் ஆக நாங்கள் எடுத்தோம். அந்த சீனில் அவர் மிகவும் ஓப்பனாக நடிக்கிறேன் என்று முன்னமே என்னிடம் கூறியிருந்தார். அந்த சீனிலும் அப்படித்தான் அவர் அழுதார். அதை பார்த்து எல்லோருக்கும் அது மிகவும் கஷ்டமாக ஆகிவிட்டது. பிரபு தேவா விஜய் சாரை கட்டிப்பிடித்துக் கொண்டார். அங்கு விஜயுடன் நடித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் அந்த சீனை பார்த்து, கரகோஷம் எழுப்பி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்
அடுத்த காட்சியிலும் சினேகாவிடம் அவர் எமோஷனலாக அதனுடைய பையன் இறந்துவிட்டார் என்று கூற வேண்டும் அந்த சமயத்தில் சினேகா இன்னொரு குழந்தையை பெற்றிருப்பார். அந்த சீனில் விஜய் சார் குழந்தை இறந்துவிட்டான் என்பதை வாயைதிறந்து கூற மாட்டார. கூறாமல் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அவர் சொல்வதைப் பார்த்து சினேகா புரிந்து கொள்ள வேண்டும்; இருவரும் என்று பிரமாதமாக நடித்திருந்தார்கள்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.1
டாபிக்ஸ்