Venkat Prabhu: ‘நண்பர் செய்த தவறு.. அதனால கல்யாணத்துக்கு யாரும் வர வேண்டாம்’ - வெங்கட்பிரபு அதிர்ச்சி அறிக்கை!
Venkat prabhu: இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. - வெங்கட்பிரபு

பிரபல இயக்குநரான வெங்கட்பிரபு தன்னுடைய தம்பியான பிரேம்ஜி கல்யாணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!
பல வருடங்கள் கழித்து நல்ல நிகழ்வு
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா!" இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்று நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம் ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்ந்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.
