தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Venkat Prabhu Hilorous Tweet About Karuppu Kalai And Cs Amuthan Reply Viral On Social Media

Venkat Prabhu: நமக்கே டஃப் கொடுப்பான் போலயே.. காய் அடித்த காத்து கருப்பு.. கலாய்த்த வெங்கட் பிரபு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 10, 2024 11:15 AM IST

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபு!

ட்ரெண்டிங் செய்திகள்

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் முக்கால் வாசி பணிகள் முடிந்து விட்டதாகவும், சில பகுதிகள் மட்டுமே எடுக்கவேண்டியுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் சோடியல் மீடியாவில் பிரபலமான காத்து கருப்பு கலை நடிக்கும் படத்தின் இயக்குநர் பேசிய வீடியோ இடம் பெற்று இருந்தது. அதில் அவர் தளபதி என்ற இடம் காலியாக இருப்பதாகவும், அடுத்த தளபதி காத்து கருப்பு கலைதான் என்று பேசி இருந்தார்.

இதனை பகிர்ந்த வெங்கட் பிரபு நமக்கு கடுமையான போட்டி கொடுப்பார்கள் போல இருக்கிறதே என்று சொல்லி இயக்குநர் அமுதனை டேக் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த அமுதன் நம்முடைய இடத்தை நான் ஒரு போது விட்டுக்கொடுத்து விடக்கூடாது. உழைத்துக்கொண்டே இருந்தால்தான் இவங்களோட களத்துல நிற்க முடியும் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது. 

முன்னதாக, ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019- ல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து விஜய்யின் தி கிரேடட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாகவும், அந்த படத்தில் வில் ஸ்மித்திற்கு மூன்று வேடங்கள் இருந்தது போல, விஜய்க்கும் இந்த படத்தில் வேடங்கள் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், விஜயை பற்றி தொடர்ந்து நெகட்டிவாக பேசி வரும் சத்யன், விஜயால் இப்படிப்பட்ட கதையை தாங்க முடியுமா? தயவு செய்து அவருக்கு தெலுங்கு ரீமேக் ஏதாவது கொடுங்கள் என்று சரமாரியாக விமர்சனம் செய்து அந்த பதிவில் வெங்கட் பிரபுவையும் டேக் செய்திருந்தார்.

அவரின் பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து , “ சாரி ப்ரோ.. இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்பை பரப்புங்கள்” என்று பதிவிட்டு இருந்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்