Vengal Rao : கை, கால் விழுந்திடுச்சு.. நடக்க முடியல என புலம்பிய நகைச்சுவை நடிகர்.. ஓடிச்சென்று உதவிய சிம்பு.. KPY பாலா!
Vengal Rao : "எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டதை பார்க்கும்போது எனது மனதை கேட்கவில்லை. என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நான் கொடுத்திருக்கிறேன். நீங்களும் உதவுங்கள். சீக்கிரம் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது- KPY பாலா

Vengal Rao : நகைச்சுவை வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த வெங்கல் ராவ் உடல்நிலை சரியில்லாமல் உதவி கேட்டு வீடியோ வெளியீட்டார். இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு நேற்று 2 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
இதைதொடர்ந்து சிரமத்தில் இருக்கும் பலருக்கும் உதவிகளை தொடர்ந்து செய்து வரும் KPY பாலா தற்போது நடிகர் வெங்கல் ராவுக்கு உதவி செய்துள்ளார். அவர் சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து இருக்கும் அவர் "எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டதை பார்க்கும்போது எனது மனதை கேட்கவில்லை. என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நான் கொடுத்திருக்கிறேன். நீங்களும் உதவுங்கள். சீக்கிரம் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வடிவேலுவுடன் நடித்த பவா லட்சுமணன் உடல்நிலை சரியில்லாத போதும் பாலா உதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
யார் இந்த வெங்கல் ராவ்
அந்த பட்டியலில் ஒருவர் தான், வெங்கல் ராவ். இவர் வடிவேலுவுடன் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் தான் வெங்கல் ராவ். இவர் 25 ஆண்டுக்கு மேலாக ஃபைட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்து உள்ளார். அதற்கு பிறகு உடல் ஒத்துழைக்காத காரணத்தினால் நடிப்பு பக்கம் வந்து இருக்கிறார்.
தலையில் இருந்து கை எடுத்தால் கடிப்பியா
கோலிவுட்டில், நீ மட்டும் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக தலையில் இருந்து கை எடுத்தால் கடிப்பியா என்ற காமெடி இன்றும் மக்களை சிரிக்க வைக்கிறது. வெங்கல் ராவின் நடிப்பு அதில் பேசப்பட்டது.
இப்படி இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக தனது சொந்த ஊரான விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
நாய் சேகர் ரிட்டன்ஸ்
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து இருந்தார். அத்துடன் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் வெங்கல் ராவ் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ வெளியீட்டு இருக்கிறர்.
அதில், "“எல்லாருக்கும் வணக்கம். நான் வெங்கல் ராவ். எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. என்னால நடக்க முடியல, பேசவும் முடியவில்லை. சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு செல்ல கூட பணம் இல்லை. மருந்து கூட வாங்க முடியவில்லை.
சினிமா நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்யுங்க. உங்களால முடிந்த உதவி செய்தால் கூட போதும். இதற்கு மேல என்னால பேச முடியவில்லை " என உருக்கமாக பேசி உள்ளார். நடிகர்கள், நடிகைகள் அவருக்கு உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்