Vengaivayal case: ‘வேங்கைவயல் விவகாரம்.. ஏன் இவ்வளவு தாமதம்..? இவங்க வந்தும் அதேதான் பண்றாங்க’ - பார்த்திபன்
Vengaivayal case: அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும் பொழுது, அவர்களும் அதே விஷயத்தை செய்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இங்கே எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. - நடிகர் பார்த்திபன்

Vengaivayal case: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022ம் ஆண்டு நடந்த இந்தச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருந்த போதும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை.
கிட்டத்தட்ட 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வேங்கை வயல் விவகாரத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் குற்றப்பத்திரிகை தாக்க செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக சாத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பார்த்திபன் பேசி இருக்கிறார்.
ஏன் இவ்வளவு காலம்?
இது குறித்து அவர் பேசும் போது, ‘வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. இரண்டு பேர் குற்றவாளிகள் என்று பதிவு செய்யப்பட்ட போதும், நீதி வழங்க எதற்கு இவ்வளவு காலம் பிடிக்கிறது.
