36 Years of Velaikaran : ’பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா’ 37 வருடங்களுக்கு முன் 'ஈ' அடித்த ரஜினி!
1987ஆம் ஆண்டு இதே மார்ச் 7ஆம் தேதிதான் வேலைக்காரன் படம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது.
1987ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேலைக்காரன். ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இது அமிதாப் பச்சன், சாஜி கபூர், சுமிதா பாட்டீல், பர்வீன் பாபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நமக் அலால் என்ற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம்.
இப்ப்டத்தில் ரஜினிகாந்த் ரகுபதி என்ற கதாபாத்திரத்திலும், சரத் பாபு ராஜ்குமார் என்ற கதாபாத்திரத்திலும், அமலா கௌசல்யா என்ற கதாபாத்திரத்திலும், கே. ஆர். விஜயா சாவித்திரி என்ற கதாபாத்திரத்திலும், வி. கே. ராமசாமி வளையாபதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார்கள்.
1980களில் தொடக்கத்தில் ரஜினிகாந்த - இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் காம்போ என்றாலே படம் ஹிட்தான் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அந்த வகையில் இவர்களது கூட்டணியில் 1985இல் வெளியான ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆக்ஷன், காமெடி என ஒரு கமர்ஷியல் பட ஹீரோவாக வலம் வந்த ரஜினிகாந்த், ஆன்மிகவாதியாக தான் விரும்பி நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை அவரது குருவான கே. பாலசந்தர் தயாரித்திருந்தார். ஆனால் ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை. இந்த படம் தந்த பிளாப்பால் இயக்குநர் கே. பாலசந்தரின் ச்ச்ச்ச்கவிதாலயா நிறுவனத்துக்கு ரஜினிகாந்த் மற்றொரு படத்தை நடித்து கொடுக்க விரும்பி எடுத்த படம்தான் வேலைக்காரன்.
இந்த முறை இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த நமக் ஹலால் என்ற படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தார். மீண்டும் எஸ்.பி. முத்துராமன் இயக்கம். தமிழுக்கு ஏற்றவாறு மாறிய இந்தப் படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவானது.
விகே ராமசாமி, செந்தில் ஆகியோருடன் ரஜினிகாந்த் படத்தில் அடித்த லூட்டி அப்போது வயிற்றை புண்ணாக்கும் விதமாகவே அமைந்தன. அதேபோல இப்படத்தில் அலுவலக காட்சி ஒன்றில் ரஜினி ஈ அடிக்கும் காட்சி மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காட்சி நானி நடித்த நான் ஈ படத்திலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் இணைந்து முதல் முறையாக அமலா ஜோடி சேர்ந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார். படத்தில் இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, காதல், காமெடி என அனைத்து காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
அதேபோல் படத்தில் இளையராஜா இசையில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது. ரஜினிகாந்த் உள்ளிட்ட குழுவினர் நடனமாட தோட்டத்திலே பாத்திகட்டி, அம்மா செண்டிமென்ட் பாடலான பெத்து எடுத்தவதான் போன்ற பாடல்கள் எவர்க்ரீன் பாடலாக இருப்பதுடன் வேலைக்காரன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வரும் பாடலாகவும் உள்ளது.
இதுதவிர மாமனுக்கு மயிலாப்பூருதான், வேலை இல்லாதவன், வா வா வா கண்ணா வா, எனக்கு தான் உன் உயிரே எனக்குதான் ஆகிய பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாகவே அமைந்தன. கமிர்ஷியல் படத்துக்கான இலக்கணம் அனைத்தும் இடம்பெற்றிருந்த வேலைக்காரன் சூப்பர் ஹிட்டானதுடன், அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமைந்தது.
1987ஆம் ஆண்டு இதே மார்ச் 7ஆம் தேதிதான் வேலைக்காரன் படம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது. வேலைக்காரன் வெளியாவதற்கு முன்னதாக ரஜினியின் குரு கே. பாலசந்தர் தயாரித்த ஸ்ரீராகவேந்திரா படம் நஷ்தட்டை ஏற்படுத்தியது. இதை ஈடுசெய்யும் விதாமாக வேலைக்காரன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், அதற்காக சம்பளமும் வாங்கவில்லை. இப்படம் வெளியாகி இன்றுடன் 37 வருடங்கள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்