சியான் விக்ரமின் 'வீர தீர சூரன்' ஓடிடியில் எப்போது? ரிலீஸ் தேதியை அறிவித்த ஓடிடி நிறுவனம்!
சியான் விக்ரம் நடித்த 'வீர தீர சூரன்: பாகம் 2' திரைப்படம் அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ் ஆக்ஷன் திரில்லர் 'படமான வீர தீர சூரன்: பாகம் 2' திரைப்படம் டிஜிட்டல் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம், இப்போது ஓடிடியிலும் அவர்களை மகிழ்விக்க வருகிறார். திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறாத நிலையிலும் இந்தப் படம், பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது ஓடிடி ரிலீஸுக்குத் தயாராகி இருக்கும் இந்தப் படம், அங்கு எப்படி ரசிகர்களை ஈர்க்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் குறித்த விவரங்கள் இதோ..
வித்தியாசமான வெளியீடு
பெரும்பாலான திரைப்படங்கள் முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாம் பாகத்தை தொடர்ச்சியாக வெளியிடுகின்றன. ஆனால், 'வீர தீர சூரன்' பட விஷயத்தில் அப்படி இல்லை. இரண்டாம் பாகம் ஏற்கனவே வெளியாகிவிட்டது, விரைவில் முதல் பாகம் தயாராகும் என இயக்குநர் அருண் கூறி இருந்தார். இப்போது 'வீர தீர சூரன்' பாகம் 2 ஓடிடியில் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இந்தப் படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தொடங்க உள்ளது. மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், அசல் தமிழ் மொழியுடன், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.