'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குவித்த வசூல்’: வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குவித்த வசூல்’: வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குவித்த வசூல்’: வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

Marimuthu M HT Tamil Published Mar 28, 2025 02:29 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 28, 2025 02:29 PM IST

VeeraDheeraSooran: வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்று விவரிக்கப்பட்டுள்ளது.

'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குவித்த வசூல்’: வீர தீர சூரன் படத்தின்  முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!
'லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குவித்த வசூல்’: வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்!

எஸ்.யு. அருண் குமார் இயக்கிய இந்த திரைப்படம், அதன் ஆரம்ப வெளியீட்டு தேதி குறிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

வீர தீர சூரன் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். 'வீர தீர சூரன் பாகம் 2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் மதுரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான காளி என்ற மளிகைக் கடை நடத்தும் நபரை மையமாகக் கொண்டது. காளி ஒரு ஆபத்தான குற்றப்பின்னணியில் ஈடுபட்டவுடன் கதை மாறுகிறது. மேலும், காளி யார் என்பதைப் படம் விவரிக்கிறது.

வீர தீர சூரன் திரைப்படம் மிகப்பெரிய விளம்பரங்களையும், விக்ரம் போன்ற நட்சத்திர நடிகர்களையும் கொண்டிருந்தாலும், மோகன்லாலின் எம்புரான் படத்துடன் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனதால், கடுமையான போட்டியை எதிர்கொண்டது. வெளியான முதல் நாளில் ரூ. 22 கோடி வசூலித்த பிறகு, எம்புரான் படம் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் கலெக்‌ஷன்:

HR Pictures நிறுவனத்தின்கீழ், ரியா ஷிபு தயாரித்த 'வீர தீர சூரன்' திரைப்படம் நல்ல துவக்கத்தைக் கண்டதாகவும், முதல் நாளில் இந்திய அளவில்  ரூ.3.2 கோடி வசூலித்ததாகவும் திரைப்படத் துறை கண்காணிப்பு ஊடகமான sacnilk.com ஊடகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வீர தீர சூரனின் தமிழ்ப் பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி, ரூ.3 கோடி வசூலித்தது. மீதமுள்ளவை தெலுங்கு மொழி திரையிடல்களிலிருந்து வந்தன. ’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்கு திரையிடல்களில் ஒட்டுமொத்தமாக 22.91 பார்வையாளர்களைப் பதிவு செய்தது. வீர தீர சூரனின் முந்தைய பாகம் 'வீர தீர பாகம் 1' என, இப்படத்தின் வெற்றிக்குப் பின் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தாமதமாக வெளியான வீர தீர சூரன்:

’வீர தீர சூரன்’ திரைப்படம் தமிழகத்தின் பல திரையரங்குகளில் காலையில் வெளியாகாமல், காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

நியூஸ்பைட்ஸ் அறிக்கையின்படி, டெல்லி உயர் நீதிமன்றம் காலை 10:30 மணி வரை படத்தின் வெளியீட்டைத் தடுத்து நிறுத்தியதால், ’வீர தீர சூரன்’ படத்தின் அனைத்து அதிகாலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான B4U தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றம், வீர தீர சூரனின் ரிலீஸை தடுத்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் அறிக்கையின்படி, தயாரிப்பாளர்கள் படத்தின் OTT உரிமைகளை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே விற்றுள்ளனர்.

இதனால், சினிபோலிஸ் மற்றும் பிவிஆர் போன்ற மல்டிபிளக்ஸ் நிறுவன தியேட்டர்களில் காலை 11:00 மணிக்கு முன் வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகள் காட்டப்படவில்லை. குறிப்பாக, வட அமெரிக்க பிரீமியர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின், ’வீர தீர சூரன்’ திரைப்படம், முதல் நாளில் மாலை வசூலை எட்டியது. இது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, "நேற்று இரவு வீர தீர சூரனின் திரையிடலுக்குப் பின் சத்யம் தியேட்டரில் இருந்து சீயான் விக்ரம் வெளியில் வந்ததும்; அவரால் காரில் ஏற முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஆட்டோவில் வீடு திரும்பினார். இதற்கிடையில், படம் எல்லா இடங்களிலும் பிளாக்பஸ்டர் என்ற அறிக்கைகளைப் பெறுகிறது" என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.