HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீன் ஏஜ் பையன்’- வேதிகா எக்ஸ்க்ளூசிவ்
மாடோ, பன்னியோ, கோழியோ அது எல்லாவே ரொம்ப ரொம்ப புத்திசாலியானவை; அவைகள நாம ஒரு உயிரா பாக்காம.. ஒரு பொருளா ட்ரீட் பண்றோம். - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

HTExclusive: ‘மாடோ, பன்னியோ, கோழியோ.. கறிக்காக கொல்றது ரொம்ப ரொம்ப தப்பு; ரஜினி சார் ஒரு டீஜ் ஏஜ் பையன்’ - வேதிகா பேட்டி
சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம். அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.
தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.