Kayal: ஷாலினிக்காக மிரட்டல்விட்ட வேதவள்ளி.. பிரியாணியில் விஷத்தை கலந்தது இவர் தான் என சொன்ன எழில்.. கயல் சீரியல் அப்டேட்
Kayal: பிப்ரவரி 14ஆம் தேதி கயல் சீரியலில் ஷாலினிக்காக மிரட்டல்விட்ட வேதவள்ளி குறித்தும், பிரியாணியில் விஷத்தை கலந்தது இவர் தான் என சொன்ன எழில் குறித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Kayal:சன் டிவியில் இரவு 7:30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிவரும் நெடுந்தொடர், கயல். இந்த சீரியலில் பிப்ரவரி 14ஆம் தேதியில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்:
இதுவரை தேவி மனதைக் காயப்படுத்திய அவரது கணவன் வீட்டார், அவளது உயிரையே எடுக்க முயற்சிசெய்திருக்கிறார்கள். ஆனால், அது அவர்களது வீட்டில் இருந்து கயல் வீட்டிற்கு மருமகளாக வந்த ஷாலினி உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், இதுதான் நடந்தது.
விக்னேஷ் அனுப்பியதாகக் கூறி, கயல் வீட்டிற்கு வந்த பிரியாணி பார்சலை, காமாட்சி வாங்கி வந்து, தேவியிடம் தருகிறாள். தன் மருமகன் மனது மாறி, தேவி மீது அன்பாக மாறிவிட்டதாக எண்ணி, இதனை தேவியிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் தேவிக்கு போன் வரவே, அது தன் கணவன் விக்னேஷாக இருக்கும் என்ற ஆசையில் பிரியாணியை சாப்பிடாமல் வைத்துவிட்டு போன் எடுக்கச்செல்கிறார், தேவி.
அந்த சிறிது நேரத்தில் கயலின் தம்பியின் மனைவி ஷாலினி, அந்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு வாயில் நுரை தள்ளிவிடுகிறது. இதைப்பார்த்த கயலின் குடும்பத்தினர் ஷாலினியை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு வந்து அவரது கணவன் அன்பு பார்த்து கவலைப்படுகின்றான்.
மிரட்டல்விட்ட வேதவள்ளி:
அடுத்து சில நிமிடங்களில் டிஸ்சார்ஜ் ஆகி இல்லத்துக்கு வரும் ஷாலினியை நேரில் பார்க்க வருகிறார், அவரது தாயும் தேவியின் மாமியாருமான வேதவள்ளி. தன் மகளுக்கு ஏதாவது ஆனால், நடப்பது வேறு என்று மிரட்டுகிறார். அப்போது உள்ளே வரும் எழில் வேதவள்ளியிடம், பிரியாணியில் விஷத்தை வைத்தது ’உங்கள் அண்ணன் தான்’ எனக் குற்றம்சாட்டுகிறார்.
தன் குடும்பத்தினரால் அவமானப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து கிளம்புகிறார், வேத வள்ளி. இனிமேல் நடப்பது என்ன என்பதை பிப்ரவரி 14ஆம் தேதி சீரியலில் பார்த்து அறியலாம்.
மேலும் படிக்க: பிப்ரவரி 13ஆம் தேதி கயல் சீரியல் அப்டேட்
மேலும் படிக்க: நிம்மதி இல்லாமல் போன கயல் குடும்பம்
மேலும் படிக்க: விக்னேஷ் பெயரை பயன்படுத்தி நடக்கும் சதி
நேற்றைய எபிசோட்:
விக்னேஷ் அனுப்பியதாகக் கூறி கயல் வீட்டிற்கு வந்த பிரியாணி பார்சலை காமாட்சி வாங்கி வந்து தேவியிடம் தருகிறாள். தன் மருமகன் மனசு மாறி தேவி மீது அன்பாக மாறி வருவதாக எண்ணி இதனை தேவியிடம் கொடுத்தார். தேவி அதைச் சாப்பிட சென்ற போது, போன் வரவே அது விக்னேஷாக இருக்கும் என்ற ஆசையில் பிரியாணியை சாப்பிடாமல் வைத்துவிட்டு போன் எடுக்கச்செல்கிறார்.
மாமாவால் மயங்கிய ஷாலினி
அந்த சமயம் அங்கு வந்த ஷாலினி, விக்னேஷ் பெயரில் அவரது மாமா அனுப்பிய பிரியாணியை சாப்பிட்டுவிட்டாள். இதனால், அவள் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தாள். இதைப் பார்த்த கயல் குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து ஷாலினியை மருத்துவமனையில் சேர்த்தனர். பின், ஷாலினி மயங்கி விழுந்துவிட்டதாகவும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அன்புவிடம் தெரிவிக்கப்பட்டது.
அம்மாவை நம்பாத அன்பு
இதைக் கேட்டு பதற்றப்பட்டு வந்த அன்பு, தன் அம்மா மேல் சந்தேகப்படுகிறான். அவர்கள் தான் ஷாலினியின் சாப்பாட்டில் ஏதோ கலந்து உள்ளனர் என்று கூறி சண்டையிடுகிறான். கயல் அம்மாவிற்கு ஆதரவாக பேசிய போது, அவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் தான் என்றும் பேசி மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.
உண்மை அறிந்த அன்பு
பின், அன்பு ஷாலினியை பார்த்து பேசிய போது தான் அவள் பிரியாணி சாப்பிட்டதும், அதை சாப்பிட்டு முடித்த உடன் மயங்கி விழுந்ததும் அன்புவிற்கு தெரிந்தது. இதையடுத்து அன்பு என்ன செய்ய போகிறான் என்பதை பொறுத்திருந்து

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்