நடிகையின் காதலை நிராகரித்து அடி வாங்கிய வருண் தவான்.. இப்படியும் ஒரு காதல் கதையா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகையின் காதலை நிராகரித்து அடி வாங்கிய வருண் தவான்.. இப்படியும் ஒரு காதல் கதையா?

நடிகையின் காதலை நிராகரித்து அடி வாங்கிய வருண் தவான்.. இப்படியும் ஒரு காதல் கதையா?

Malavica Natarajan HT Tamil
Dec 28, 2024 02:13 PM IST

பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பேசுபொருளாக இருக்கும் நடிகர் வருண் தவான், தான் ஒரு நடிகையின் காதலை ஏற்க மறுத்ததால் அவரிடமும் அவரது நண்பர்களிடமும் அடி வாங்கியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகையின் காதலை நிராகரித்து அடி வாங்கிய வருண் தவான்.. இப்படியும் ஒரு காதல் கதையா?
நடிகையின் காதலை நிராகரித்து அடி வாங்கிய வருண் தவான்.. இப்படியும் ஒரு காதல் கதையா?

சம்பவம் செய்த வருண்

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவர் ஷ்ரத்தா கபூர். ஒரு காலத்தில் நட்சத்திர நடிகரான சக்தி கபூரின் மகளாக திரையுலகில் நுழைந்தார். பின்னர் அவரது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். இவர் இந்த ஆண்டு ஸ்ட்ரீ 2 படத்தின் மூலம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இப்படி ஒரு கதாநாயகி தன்னை காதலிப்பதாக சொன்னால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள். ஆனால், ஷ்ரத்தா கபூரே காதலை சொல்லியும் அவரை வேண்டாம் என நிராகரித்துள்ளாராம் ஒரு நடிகர். அவர் வேறு யாரும் அல்ல தற்போது பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் ஹிட் நாயகனாக மாறியுள்ள வருண் தவான் தான்.

பழைய கதைகளை நினைவு கூர்ந்த நடிகர்கள்

ஷ்ரத்தா கபூர் முன்பு 'ஸ்ட்ரீ 2' படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக இதைக் கூறியிருந்தார். அந்த பேட்டியில் தான் வருண் தவானிடம் காதலை சொன்னதாகவும் ஆனால் அவர் அதை நிராகரித்ததாகவும், தனக்கு பெண்கள் மீது ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டதாகவும் தன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தினார். 

அதே சமயம், சமீபத்தில், வருண் தவானும் பேபி ஜான் திரைப்படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக இதே விஷயத்தை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், ஷ்ரத்தா கபூரின் காதலை நிராகரித்ததால் தான் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறினார். இந்த சம்பவம் இவர்கள் இருவரும் குழந்தையாக இருக்கும் போது நடந்ததாகவும் கூறினார்.

வருணிடம் காதலை சொன்ன ஷ்ரத்தா

வருண் தவான் யூடியூபர் சுபங்கர் மிஸ்ராவுடன் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், ஷ்ரத்தாவின் அப்பாவும், என்னுடைய அப்பாவும் எங்களை ஷூ்ட்டிங் பார்க்க அழைத்து வருவார்க்ள். அந்த சமயத்தில் தான் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு 8 வயது. அவள் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாக கூறினாள். ஆனால் நான் அவரின் காதலை ஏற்க மறுத்துவிட்டேன்.

ஏன் ஷ்ரத்தாவை பிடிக்கவில்லை

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷ்ரத்தா தனது 10வது பிறந்தநாளுக்கு என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். நான் பார்ட்டி எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு கிளம்ப தயாரானேன், அப்போது அங்கே இருந்த மூன்று அல்லது நான்கு சிறுவர்கள் என்னிடம் பேசினர். அப்போது அவர்கள் அனைவருக்கும் ஷ்ரத்தாவை மிகவும் பிடிக்கும் என்றும் நீ ஏன் அவர் காதலை ஏற்கவில்லை என்றும் கேட்டனர்.

ஷ்ரத்தா என்னை அடித்தாள்

அப்போது, எனக்கு பெண்கள் மீது ஆர்வம் இல்லை. நான் ஒரு நடனப் போட்டியில் வெற்றி பெற வந்துள்ளேன் என்று கூறிவிட்டேன். நான் சொன்னதைக் கேட்டு கோபமடைந்த அவர்கள் என்னுடன் சண்டையிட்டனர். என்னை அடித்தனர். நான் ஷ்ரத்தாவை நிராகரித்ததற்காக என்னை அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து ஷ்ரத்தாவும் என்னை அடித்தாள் என்றார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களின் அழகான குட்டி காதல் கதையை ரசித்தனர். மேலும், இது மிகவும் வேடிக்கையாக இருந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வருண்- ஷ்ரத்தா திருமணம்

ஷ்ரத்தா கபூரின் காதலை ஏற்க மறுத்த வருண் தவான் தற்போது நடாஷா தலால் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் ஷ்ரத்தா இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார். மறுபுறம் இவர் ராகுல் மோடி என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.