தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Varalaxmi Sarathkumar Slipper Shot Answer To Her Marriage Criticism

Varalaxmi sarathkumar: நான் இரண்டாவது மனைவியா?.. ‘உங்களுக்கு ஏத்த மாதிரியெல்லாம்’ - வரலட்சுமி காட்டம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 11, 2024 12:07 PM IST

உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம். உங்களுக்கான விதிமுறைகளில் வாழும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் உங்களை குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 1-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.  வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகள் இருவரும் பழகிய நிலையில், தற்போது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நிக்கோலாய் சச்தேவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், வரலட்சுமி இரண்டாவது மனைவியாகிறாரா? என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. இதனை பலரும் பல விதமாக பேசினர். இதற்கு வரலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ உலகத்திற்கு ஏற்ற வகையில் பெண்களை மாற்றுவது குறித்து சிந்திக்காதீர்கள். 

உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம். 

உங்களுக்கான விதிமுறைகளில் வாழும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் உங்களை குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். 

அவர்கள் உங்களுக்காக இருக்கப்போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்காக இருக்கப்போகிறீர்கள். ஆகையால் வாழ ஆரம்பியுங்கள். பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, வரலட்சுமி சரத்குமார் சோசியல் மீடியாவில் ஆபாசமாக தன்னை கமெண்ட் அடிப்பவர்களுக்கு சில மாதங்களுக்கு எஸ்.எஸ். யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

அவர் பேசும் போது, “ நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய அம்மாவையோ, தங்கையையோ அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களையோ இவ்வாறு பேசுவீர்களா?

உங்களுக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து விட்டு விடுங்கள். நீங்கள் அவரை அன்ஃபாலோ செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாமே? எதற்காக அவரை பாலோ செய்து, அவருக்கு கமெண்ட் அடித்து, கஷ்டப்படுத்த வேண்டும்.

உங்களை நாங்கள் பாலோ செய்ய கேட்டோமா என்ன..? நீங்கள்தான் ஃபாலோ செய்கிறீர்கள். அப்படி இருக்கையில், நாங்கள் பதிவிடும் பதிவுகள் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் இல்லையென்றால்.

அப்படியே விட்டு சென்று விடுங்கள். அது உங்கள் விருப்பம். அங்கு கமெண்ட் அடிப்பவர் முகம் தெரியாத ஆளாக இருக்கிறார். அப்படியான இடத்தில் இருந்து கொண்டு கமெண்ட் அடிப்பவருக்கு என்ன தைரியம் இருக்கிறது.

உண்மையிலேயே உங்களுக்கு கமெண்ட் அடிக்க வேண்டும் என்றால், நேருக்கு நேராக வந்து கமெண்ட் அடியுங்கள்.. நேருக்கு நேராக பேச தைரியம் இல்லாதவன் என்னை பொறுத்தவரை ஒரு கோழை. கோழையிடம் எனக்கு பேச எனக்கு விருப்பமில்லை அவனிடம் எனக்கு வேலையும் இல்லை” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்