‘நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..’ வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..’ வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!

‘நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..’ வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 28, 2025 10:01 PM IST

‘குழந்தையாக இருந்த போது, ஐந்து முதல் ஆறு பேர் என்னை துன்புறுத்தினர். உங்கள் கதை தான் என் கதையும். எனக்கு குழந்தைகள் இல்லை, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பற்றி கற்பிக்க வேண்டும்’

‘நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..’ வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!
‘நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..’ வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!

கெமி என்ற போட்டியாளர் தனது குடும்ப உறுப்பினர்களால் தான் எவ்வாறு துன்புறுத்தப்பட்டேன் என்பதை வெளிப்படுத்தினார். அவரது கதையை கேட்டு வரலட்சுமி கண்ணீர் விட்டு, "நானும் உங்களைப் போலத்தான். எனது பெற்றோர் அப்போது வேலை செய்து கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் என்னை மற்றவர்களின் கவனிப்பில் விட்டுச் சென்றனர்" என்று கூறினார்.

5 முதல் 6 பேர் துன்புறுத்தினர்

"குழந்தையாக இருந்த போது, ஐந்து முதல் ஆறு பேர் என்னை துன்புறுத்தினர். உங்கள் கதை தான் என் கதையும். எனக்கு குழந்தைகள் இல்லை, ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘குட் டச்’ மற்றும் ‘பேட் டச்’ பற்றி கற்பிக்க வேண்டும் என்று நான் எப்போதும் சொல்கிறேன்" என்று நடிகை வரலட்சமி வருத்தத்துடன் கூறினார்.

வரலட்சுமி சரத்குமார் பிரபலமான நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா தேவியின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக, நடிகை வரலட்சுமி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இது அவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான ஆளுமைகளில் ஒருவராக மாற்றியுள்ளது.

வரலட்சுமி சரத்குமாரின் பயணம்

அவர் நடிகை ராதிகாவின் வளர்ப்பு மகள் ஆவார். சமீபவத்தில் மும்பையைச் சேர்ந்த கேலரி உரிமையாளர் நிகோலாய் சச்தேவ் என்பவரை, கடந்த ஜூலை 3, 2024 அன்று திருமணம் செய்து கொண்டார். வரலட்சுமி சரத்குமார் கடைசியாக ஆனந்தியுடன் நடித்த தெலுங்கு மொழி திரில்லர் திரைப்படமான ஷிவாங்கி லயன்ஸில் காணப்பட்டார். இந்த படம் மார்ச் 7, 2025 அன்று வெளியானது.

தளபதி விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் ஜன நாயகன் படத்திலும் வரலட்சுமி நடிக்க உள்ளார். இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார், மேலும் பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு: குடும்ப வன்முறை அல்லது தாக்குதல் அல்லது துஷ்பிரயோகத்துடன் போராடும் யாரையாவது உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் அருகிலுள்ள மனநல நிபுணர், அரசு சாரா அமைப்பு அல்லது யாராவது ஒருவரிடம் தெரிவியுங்கள். இதற்கான பல உதவி எண்கள் உள்ளன.