தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varalaxmi Sarathkumar: ‘எங்க அப்பாவே அப்படித்தான்; செகண்ட் ஹேண்ட் பைக்க ஓட்ட மாட்டீங்களா?’ - பச்சையாக கேட்ட வரலட்சுமி!

Varalaxmi Sarathkumar: ‘எங்க அப்பாவே அப்படித்தான்; செகண்ட் ஹேண்ட் பைக்க ஓட்ட மாட்டீங்களா?’ - பச்சையாக கேட்ட வரலட்சுமி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 28, 2024 04:45 PM IST

ஆனால் அதே நேரம், நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. திருமணம் சரியான காரணங்களுக்காக செய்யப்பட வேண்டும். என்னுடைய பாட்டி சாகக் கிடக்கிறார், அதனால் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் அல்லது வீட்டில் அழுத்தம் கொடுக்கிறார்கள் அதற்காக கல்யாணம் செய்யப் போகிறேன், என்பதற்காகவெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாது.

வரலட்சுமி!
வரலட்சுமி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில்,  “நிக்கியின் முந்தைய திருமண வாழ்க்கையில், அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே செட்டாகவில்லை. இதனையடுத்து அவர்கள் பிரிந்து விட்டார்கள். 

அவர்களை நான் சென்று பிரிக்கவில்லை. அவர்கள் பிரிந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாங்கள் சந்தித்தோம்; பேசினோம். எங்களுக்கு பிடித்தது. இப்போது கல்யாணம் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம். என்னுடைய அப்பாவே இரண்டாவது திருமணம் செய்தவர்தானே! இதில் ஒன்றும் தப்பில்லை.

முன்பு எனக்கு திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருந்தது. அப்போது, நான் என்னை திருமணத்திற்கான ஆள் இல்லை என்று கூறியிருந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய மனநிலை அப்படியாகத்தான் இருந்தது. 

ஆனால் அதே நேரம், நான் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. திருமணம் சரியான காரணங்களுக்காக செய்யப்பட வேண்டும். என்னுடைய பாட்டி சாகக் கிடக்கிறார், அதனால் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் அல்லது வீட்டில் அழுத்தம் கொடுக்கிறார்கள் அதற்காக கல்யாணம் செய்யப் போகிறேன், என்பதற்காகவெல்லாம் கல்யாணம் செய்யக்கூடாது. 

இரண்டு பேரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளலாம். முன்பு எனக்கு ஒத்த பார்ட்னர் கிடைக்கவில்லை. அதனால் அப்போது அப்படி பேசினேன். ஆனால் இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது; நான் நிச்சயம் செய்து கொண்டிருக்கிறேன்.

விவாகரத்து என்பது முத்திரையல்ல; இரண்டு பேர் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஒத்துவரவில்லை; பிரிந்து செல்கிறார்கள் அவ்வளவுதான் அதில் இருப்பது. நீங்கள் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தை மீண்டும் வாங்க மாட்டீர்களா என்ன? உங்கள் மனதுக்கு அது பிடித்திருந்தால், நீங்கள் தாராளமாக அதை வாங்கி பயன்படுத்தலாம்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்