Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!

Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 02, 2025 07:37 AM IST

Varalakshmi Sarathkumar: நான் என்னை சுற்றி உள்ளவர்கள் சிறிது மனம் நொந்து இருந்தால் கூட, கண்டுபிடித்து விடுவேன். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பேன் அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று அவர்களிடமே கேட்டு விடுவேன்.

Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை;

பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!
Varalakshmi Sarathkumar: பாலியல் துன்புறுத்தலில் பட்ட வேதனை; பொதுவெளியில் கண்ணைக்கசக்கியது ஏன்? -வரலட்சுமி பேட்டி!

அழுதது ஏன்?

இதுகுறித்து அவர் பேசும் பொழுது, ' டான்ஸ் ஜோடி டான்ஸில் எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை பற்றி பேசும்பொழுது நான் அழுதுவிட்டேன். பொதுவெளியில் மிகவும் தைரியமாக பேசும் நான், அந்த நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன். நான் அழுதது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.

அப்போது, நானே எனக்குள் கேட்டுக் கொண்டேன் வரலட்சுமி.. நீ உண்மையில் அழுகிறாயா என்று.. அதற்கு என்னுடைய உள் மனது ஆமாம் நான் அழுகிறேன் என்றது. அங்கு என் முன்னால் நடனமாடிய பெண், கிட்டத்தட்ட என்னுடைய குண நலன்களை ஒத்து இருந்தவர்.

அவர் சத்தமாக பேசுவார். தன்னை சுற்றியுள்ளவர்களை சிரிக்க வைப்பார். நானும் அப்படியானவள்தான். அதனால், அவர் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை பற்றி கூறும்பொழுது, அது எனக்கு இன்னும் நெருக்கமாகிவிட்டது. அதனால் தான் நான் அன்று அழுதுவிட்டேன்.

நான் என்னை சுற்றி உள்ளவர்கள் சிறிது மனம் நொந்து இருந்தால் கூட, கண்டுபிடித்து விடுவேன். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பேன் அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று அவர்களிடமே கேட்டு விடுவேன்.

நான் எனக்கு நேர்ந்த சம்பவத்தை என்னுடைய 18 வது வயதில் என்னுடைய பெற்றோரிடம் கூறினேன். இன்றும் இது போன்ற சம்பவத்தை வெளியே சொல்ல கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். அது தவறு!

நான் பேசியதை பார்த்த பல பெண்கள் எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பி இருக்கிறார்கள். அதில் அவர்கள், நீங்கள் கூறியதை பார்க்கும் பொழுது எனக்கு நடந்தவற்றையும் வெளியில் சொல்லும் தைரியம் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இன்னும் சில பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்பத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று அவர்களது பெற்றோரிடம் சென்றபோது, அவர்கள் தேவையில்லாமல் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்காதே என்று கூறியிருக்கின்றனர்.

உண்மையில் அப்படி எந்த பெற்றோரும் செய்யக்கூடாது. காரணம், அவர்களுக்கு நேர்ந்து இருக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல் எப்படியானது என்பதை நீங்கள் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும். பெண்கள் இது போன்ற சம்பவங்களை வெளியில் சொல்வதற்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது. அந்த தைரியத்தை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.