தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Varalaxmi : வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம.. விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி!

Varalaxmi : வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம.. விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி!

Divya Sekar HT Tamil
Jun 12, 2024 10:59 AM IST

Varalaxmi Sarathkumar : தனது முதல் பட இயக்குனராக விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் வரலட்சுமி.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம.. விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி!
வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம.. விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி!

ட்ரெண்டிங் செய்திகள்

வருங்கால கணவரானநிக்கோலாய் சச்தேவ்

இதையடுத்து இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வரலட்சுமியின் வருங்கால கணவரானநிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான நிக்கோலாய் சச்தேவ், தனது மனைவியை பிரிந்துவிட்ட நிலையில், தற்போது வரலட்சுமியை திருமணம் செய்ய உள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தமில்லாமல் வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்

இவர்களது திருமணம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சத்தமில்லாமல்  வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இன்று தான் அது குறித்து முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்க இருவரும் மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம் என்ற தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 14 ஆண்டுகளாக தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் பழகி வந்து, தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக ஹனுமன் என்ற தெலுங்கு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற உள்ளது

இதைத்தொடர்ந்து தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அத்துடன் மலையாலத்தில் கலர்ஸ், தெலுங்கில் சபரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் சரத்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தனது முதல் பட இயக்குனராக விக்னேஷ் சிவனை நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் வரலட்சுமி.

அதேபோல், முதல்வர் ஸ்டாலின், எம்.பி.கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும், திருமண அழைப்பிதழை கொடுத்து வரும் வரலட்சுமி சரத்குமார், நடிகர் சித்தார்த்தை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். வரலட்சுமியின் கழுத்தில் கைபோட்டு சித்தார்த்த வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews              

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.