தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vanitha Vijayakumar Says Bigg Boss Tamil Season 7 Says Archana Played A Cheat Game

Vanitha Vijayakumar: ‘அவ ஆடுனது சீப் கேம்.. என்னா ட்ராமா.. சூழ்ச்சிக்காரி.. அர்ச்சனா மூஞ்சு மேல’ -கொந்தளித்த வனிதா

Kalyani Pandiyan S HT Tamil
Jan 10, 2024 11:11 AM IST

விஷ்ணுவை பொறுத்தவரை அவன் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டான், என்ன மாதிரியான வார்த்தைகளை பிரயோகித்தான் உள்ளிட்ட அனைத்தும் வெளியே வந்திருக்கிறது.

பிக்பாஸ் சீசன் தமிழ்!
பிக்பாஸ் சீசன் தமிழ்!

ட்ரெண்டிங் செய்திகள்

விஷ்ணுவை பொறுத்தவரை அவன் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டான், என்ன மாதிரியான வார்த்தைகளை பிரயோகித்தான் உள்ளிட்ட அனைத்தும் வெளியே வந்திருக்கிறது. 

அதே போல  பிக் பாஸ் நிகழ்ச்சியின் கேம் சேஞ்ஜராக பார்க்கப்படக்கூடிய அர்ச்சனா முகத்திரையும் கிழிந்திருக்கிறது. பொதுவாக கேம் சேஞ்சர் என்றால், ஒரு நிகழ்ச்சி சுமாராக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் ஒருவர் அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுவார். அவரைத்தான் நாம் கேம் என்று சொல்வோம். 

ஆனால் அர்ச்சனாவை பொருத்தவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நாசம் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அர்ச்சனா பெரிய சுயநலவாதி, சூழ்ச்சி செய்யக் கூடியவள், பயங்கரமான ட்ராமா செய்யக் கூடியவர். இது அப்பட்டமாக அந்த ஆக்சன் படத்தில் காண்பிக்கப்பட்டு விட்டது.

அர்ச்சனா இந்த கேமை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். மற்றவர்கள் காலியானாலும் பரவாயில்லை நான் மேலே தெரிய வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார். நான் இதனை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்வேன். 

அர்ச்சனா வெளியே வந்தாலும் அதை அவள் மூஞ்சி மேலே சொல்வேன். அவர் ஆடியது போல ஒரு ஏமாற்றுத்தனமான கேமை கடந்த ஏழு சீசன்களில் நான் பார்த்ததே கிடையாது. எனக்கு இது பயங்கரமான கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.காரணம் என்னவென்றால் இது மிக மிக தவறான விஷயம்.”  என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.