Vanitha Vijayakumar: ‘எடுத்த நல்ல பேரு அவ்வளவும் ஒரே வாரத்துல..மக்கள ஏமாத்திட்டு..’ - விசித்ரா வெளுத்த வனிதா!-vanitha vijayakumar latest interview about big boss tamil season 7 vichithra eviction - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha Vijayakumar: ‘எடுத்த நல்ல பேரு அவ்வளவும் ஒரே வாரத்துல..மக்கள ஏமாத்திட்டு..’ - விசித்ரா வெளுத்த வனிதா!

Vanitha Vijayakumar: ‘எடுத்த நல்ல பேரு அவ்வளவும் ஒரே வாரத்துல..மக்கள ஏமாத்திட்டு..’ - விசித்ரா வெளுத்த வனிதா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 08, 2024 08:09 AM IST

அர்ச்சனாவை பொருத்தவரை அவருக்குப் பின்னால் பி ஆர் ஒருவர் இயங்குகிறார். அவர் இவரை நிகழ்ச்சியில் நன்றாக காண்பதற்கான வேலையை செய்கிறார். சேனலும் அதை அனுமதிக்கிறது.

வனிதா விஜயகுமார்!
வனிதா விஜயகுமார்!

அவர் பேசும் போது, “எல்லோரும் எதிர்பார்த்தது போல விசித்திரா தான் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். 

இந்த எவிக்‌ஷன் நடைமுறை எப்படி நடைபெறுகிறது ஹாட்ஸ்டாரில் வரும் ஓட்டுகளை வைத்து நடைபெறுகிறதா? அல்லது வெப்சைட்டில் விழும் ஓட்டுகளை வைத்து சேனல் முடிவு எடுக்கிறதா என்பதை சில குழப்பங்கள் இருந்தன. இது தொடர்பான குற்றச்சாட்டை நானும் பலமுறை முன் வைத்திருக்கிறேன். 

காரணம் என்னவென்றால் அந்த ஓட்டுகளின் அடிப்படையில் இல்லாமல் சேனலின் முடிவின் அடிப்படையில், போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதில் நிக்சனும் ஒருவர். மாயாவிற்கு வீட்டில் இருக்கக்கூடிய முக்கால்வாசிபேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். நானும் அவருடைய ரசிகர் தான் காரணம் என்னவென்றால்,அவருடைய நடவடிக்கைகள் பிக் பாஸ் நிகழ்ச்சி நகர்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

பூர்ணிமாவை பொறுத்தவரை அவர் தனக்கு பதினாறு லட்சம் போதும் என்று எடுத்துச் சென்று விட்டார். அது அவர் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளில் மிக முக்கியமானது. அவர் ஒரு குழப்பத்திலிருந்து வெளியே வந்து விட்டார் என்று கூட சொல்லலாம். 

அர்ச்சனாவை பொருத்தவரை அவருக்குப் பின்னால் பி ஆர் ஒருவர் இயங்குகிறார். அவர் இவரை நிகழ்ச்சியில் நன்றாக காண்பதற்கான வேலையை செய்கிறார். சேனலும் அதை அனுமதிக்கிறது. 

இந்த நிலையில்தான் நேற்று நடந்த விசித்ராவின் எவிக்‌ஷன் எனக்கு ஒரு நம்பிக்கையை தந்திருக்கிறது. காரணம் என்னவென்றால், இவ்வளவு நாட்கள் அவர் வாங்கிய நல்ல பெயர்கள் எல்லாம், இந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் தடம் மாறியது என்று சொல்லலாம். 

அவர் செய்த சில விஷயங்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது உண்மைதான். அதன் அடிப்படையில் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருப்பது என்பது மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் தான், நிகழ்ச்சி நகர்கிறது என்று ஒரு நம்பிக்கையை தந்திருக்கிறது

விசித்ரா வெளியேற்றப்பட்டதை நான் ஒரு நியாயமான விஷயமாக பார்க்கிறேன். உண்மையில் அவர் மக்களை ஏமாற்றினார்.” என்று பேசினார்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.