Vanitha Vijayakumar: எனக்கு குழந்தை வேணும்.. பெட்ரூமில் சம்பவம் செய்யும் வனிதா..காதலும், காமெடியும் கலந்த கதை
Vanitha Vijayakumar: 40 வயதாகும் அனிதா, 45 வயதாகும், 45 வயதாகும் ராபர்ட் இடையே நடக்கும் ஊடலும், காதலுமாக மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் டீஸர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே படத்தின் போஸ்டர் மூலம் பகீர் கிளப்பிய இந்த ஜோடி தற்போது டீஸரில் காமெடியுடன், பெட்ரூம் சீன் என சூடேற்றியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் 1995இல் வெளியான சந்திரலேகா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின்னர் மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ் என்ற தெலுங்கு படம், தேவி என்ற மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமாகி செட்டிலானார்.
பின்னர் 2013இல் கம்பேக் கொடுத்த இவர் தற்போது சினிமா, டிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து வனிதா விஜயகுமார் நடித்து, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் டீஸரை வெளியிடப்பட்டுள்ளது.
ரொமாண்டிக் காமெடி கதை
தம்பதிகளாக இருக்கும் 40 வயதாகும் அனிதா, 45 வயதாகும், 45 வயதாகும் ராபர்ட் இடையே குழந்தை பெற்றுக்கொள்வதில் நடக்கும் சண்டையும், அதன் பின்னணியில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களும் டீஸர் காட்சியில் இடம்பிடித்துள்ளன. காதம் மற்றும் காமெடியான காட்சிகளுடன் ரொமாண்டிக் காமெடி கதையாக படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது.
படத்தில் வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கதையின் நாயகன், நாயகியாக நடித்துள்ளார்கள். ஸ்ரீமன்,
பாத்திமா பாபு, செஃப் தாமு, ஷகீலா உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை போஸ்டர்
முன்னதாக, இந்த படத்தின் போஸ்டரை வனிதா - ராபர்ட் ஆகியோர் திருமண கோலத்தில் இருப்பது போல் வெளியிடப்பட்டது. இதனால் வனிதா மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா என்று பரபரப்பாக பேசப்பட்ட போது, மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் புராமோஷனுக்காக எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கல்
டிவி சீரியல்களில் பிஸியாக இருந்து வரும் வனிதா, படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி பல்வேறு சண்டையும், சர்ச்சையும் கிளப்பியவராக திகழ்ந்தார். ஆரம்பத்திலேயே எவிக்ட் செய்யப்பட்ட இவர் பின்னர் ரீ என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டையை கிளப்பியவராக இருந்தார்.
கல்யாண சாப்பாடு போடுறேனா?
சமீபத்தில் நடிகை வனிதா அளித்த பேட்டியில், "ரியாலிட்டி ஷோவில் என்னிடம் கல்யாண சாப்பாடு எப்போ போடுவீங்க என்று ஒருவர் கேட்டது பெரிய பேசு பொருளானது. சினிமாவில் ஒரு சிலரிடம் தான் இந்த கேள்வியை கேட்க முடியும். நடிகர் பிரசாந்தை பார்த்தால், இந்த கேள்வியை கேட்பார்கள். அதே போல சல்மான் கானிடம் கேட்பார்கள். சிம்பு வரைக்கும் அந்த கேள்வி இருக்கும். நீங்கள் சிங்கிளா இருந்தா, இந்த கேள்வி வரத்தான் செய்யும். முந்தைய வாழ்க்கையை விட்டுவிடுங்கள், தற்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து தான் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.
நமக்கு என்று ஒரு கணவரோ, துணைவரோ இல்லை என்றால், பொதுமக்கள் நம்மை தனி மனிதராக தான் பார்க்கிறார்கள். நம் மீது உள்ள ஒரு அன்பில் தான், அப்படி கேட்கிறார்கள். மற்றபடி, கிண்டலாக அதை எடுத்துக் கொள்ள முடியாது. அதை உரிமையாக தான் எடுத்துக் கொள்ள முடியும். என்னிடம் அந்த கேள்வியை எழுப்பியது தொகுப்பாளர் பிரியங்கா தான். நல்ல துணை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அது ஒரு ஆசிர்வாதம், திடீர்னு அமையும். அதை சொல்ல முடியாது. ஜாலியா ஒரு அக்காவிடம், தங்கையிடம் பேசுவதைப் போல தான், நானும் பிரியங்காவும் பேசிக் கொண்டோம்.
எனக்கு மக்களிடம் கிடைக்கும் அன்பு, அபரிவிதமானது. நான் ஒரு பப்ளிக் ப்ராப்பர்ட்டி என்று நினைக்கிறேன். அதனால் அனைவரும் என்னைப் பற்றி முன்வந்து பேசுகிறார்கள். வைரல் ஸ்டார் வனிதா என்று அழைக்கிறார்கள். நான் யாரிடமும் அப்படி போட சொல்வதில்லை. மற்றவர்கள் அதை பயன்படுத்தும் போது, நான் யாரையும் தடுக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.

டாபிக்ஸ்