Vanitha: பணத்தால் வென்ற அர்ச்சனா.. வன்மத்தை கக்கிய வனிதா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vanitha: பணத்தால் வென்ற அர்ச்சனா.. வன்மத்தை கக்கிய வனிதா

Vanitha: பணத்தால் வென்ற அர்ச்சனா.. வன்மத்தை கக்கிய வனிதா

Aarthi Balaji HT Tamil
Jan 16, 2024 07:03 AM IST

பிக் பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா குறித்து தன் அதிருப்தியை வனிதா விஜயகுமார் வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா தனது வலுவான விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதால், அவர் பங்கேற்பதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

உண்மையில், பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா வெற்றி பெற்றார் என்ற செய்திகள் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. மாயா 23054 வாக்குகளையும், மணிச்சந்திரா 35184 வாக்குகளையும் பெற்றார். மறுபுறம், அர்ச்சனா 109468 வாக்குகளைப் பெற்றார்.

அர்ச்சனாவின் வெற்றியை பலரும் கொண்டாடி வருகிறார்கள். மறுபக்கம் அவர் பிஆர் வைத்து தான் டைட்டில் பட்டத்தை வென்றார் என்ற சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வனிதா விஜயகுமார் பிஆர் டீம் வைத்து அர்ச்சனா, டைட்டில் பட்டத்தை வென்றார் என குற்றம் சாட்டி உள்ளார். அதில், “ பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை பணம் , ப்ரோமோஷன்களை பயன்படுத்தியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். 

அந்த மேடையில் ஜனநாயகம் தோற்றும் பணநாயகம் ஜெயித்துவிட்டது. அவர் டைட்டில் வின்னர் என அறிவித்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் அங்கு இருந்து நான் கிளம்பிவிட்டேன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் என்னிடம் வந்து பேசினார்கள். அது அவர்களுக்கு அதிருப்தியாக இருந்தது. எனது முத்த மகள் ஜோவிகா போட்டியாளராக இருந்ததால் நான் வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியாது.

இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்கள் நடந்தது. அதன் வழியாகவே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். என்னுடைய மகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பிள்ளையார் சுழி போன்றது. ஜோவிகா யார்? என்பதை நிரூபிக்க இந்த நிகழ்ச்சி அவளுக்கு பயனுள்ளதாக இருந்தது “ என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.