தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vanangaan Teaser Out Now! Arun Vijay &Amp; Bala Film Sparks Excitement

Vanangaan Official Teaser: ’ஒரு கையில் பெரியார்! மறு கையில் பிள்ளையார்!’ வெளியானது வணங்கான் டீசர்!

Kathiravan V HT Tamil
Feb 19, 2024 05:18 PM IST

“Vanangaan Official Teaser: கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது”

வணங்கான் பட டீசர் காட்சிகள்
வணங்கான் பட டீசர் காட்சிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து ஷூட்டிங்கும் விறுவிறுவென நடந்து வந்தது. ஆனால், சில காரணங்களால் ஷூட்டிங் தொடர்ந்து நடக்காமல் கைவிடப்பட்டு, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் கதாநாயகனா இணைந்தார்.

நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் முக்கிய துணை வேடங்களில் நடிக்கும் நிலையில், வணங்கான் படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

சனிக்கிழமையன்று, அருண் விஜயின் வரவிருக்கும் படமான வணங்கான் படத்தின் டீஸர் பிப்ரவரி 19 அன்று வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடக தளங்களில் அறிவித்தனர். 

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பாலாவின் பி ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. சுரேஷ் காமாட்சி, மாநாடு, ஜீவி 2 உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவர் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல், ஏழு மலை படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்படத்தினை, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வணங்கான் படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார், சில்வா சண்டை மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 

இந்த நிலையில் ஏற்கெனவே படக்குழு அறிவித்தபடி படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் டீசர் தொடங்குகிறது. தேவாலயத்தின் பின்னணியில், நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் வேறுபட்டத் தோற்றத்தில் அருண் விஜய் தோன்றுகிறார். சண்டைக்காட்சிகள் நிறைந்துள்ள இந்த திரைப்படத்தில், கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பிரம்பிக்க வைக்கிறது. 

முன்னதாக, திரைத்துறையில் பாலாவை பற்றி நெகட்டிவான விமர்சனங்கள் இருக்கும் நிலையில், ஒரு தயாரிப்பாளராக அவரை தேடிச் சென்றது ஏன்? வணங்கான் படத்தின் டீசர் எப்போது வருகிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து வணங்கான் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்துஸ்தான் தமிழ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார்.

அதில், “பாலா ஒரு வியாபாரி கிடையாது அவர் நினைத்ததை திரையில் கொண்டு வர வேண்டும் என்று போராடும் ஒரு கலைஞன். பிற இயக்குநர்கள் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அந்த கதாபாத்திரம் வெறும் போலீசாக வந்து போலீசாகவே சென்றுவிடும்.

ஆனால் பாலா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால், அதற்கென்று ஒரு தனி உடல் பாணியை வைப்பார். அவரது முடி எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்ப்பார். வசனங்களை எப்படி பேச வேண்டும் என்பதற்கு தனி மொழி நடையை உருவாக்குவார்.

அவருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவர் ஷூட்டிங்கை இழுத்தடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரை நாம் சரியாக இருந்துவிட்டால், அவரும் சரியாக இருப்பார். உண்மையாகச் சொல்கிறேன் எனக்கு பாலாவுடன் எந்தவிதமான ஒரு அசௌகரியமும் இதுவரை நடக்க வில்லை. ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் பொழுது, ஒரு நல்ல இயக்குனரை நாம் தேடிச் செல்வது ஒன்றும் தவறில்லை என்று எனக்குத் தோன்றியது என குறிப்பிட்டு இருந்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்